இந்தியா

25 ஆண்டுகால பிரச்சனையில் சகோதரர்கள் அடித்துக்கொலை!

Published

on

25 ஆண்டுகால பிரச்சனையில் சகோதரர்கள் அடித்துக்கொலை!

இந்திய மாநிலம் குஜராத்தில் சகோதரர்கள் இருவர் நிலத்தகராறில் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் சுரேந்தி நகர் மாவட்டத்தின் சமத்ஹியல் கிராமத்தைச் சேர்ந்த சகோதரர்கள் அலல்ஜி பர்மர் (60), மனோஜ் பர்மர் (54).

இவர்களுக்கும் அமர்பாய் கூச்சர் என்பவரின் குடும்பத்தினருக்கும் 1998ஆம் ஆண்டு முதல் நிலம் தொடர்பில் பிரச்சனை இருந்து வந்துள்ளது.

விளைநிலம் தங்களுக்கு சொந்தம் என இருதரப்பினரும் நீதிமன்றத்தை நாடிய நிலையில், அலல்ஜி பர்மரின் குடும்பத்தினருக்கு தான் நிலம் சொந்தம் என தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து பர்மர் சகோதரர்கள் உழவு பணியை முடித்துவிட்டு வீடு திரும்பியபோது, அமர்பாய் கூச்சர் தனது குடும்பத்தினரிடம் சேர்ந்து அவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது.

கூர்மையான ஆயுதங்களால் தாக்குதலுக்கு உள்ளானதால் அலல்ஜி, மனோஜ் சகோதரர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அத்துடன் மூன்று பெண்கள், டிராக்டர் ஓட்டுநர் படுகாயமடைந்த நிலையில் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த பொலிஸார், கொலை குற்றம் தொடர்பில் ஐந்து பேரை கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், சகோதரர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version