உலகம்

அரிய சாதனை படைத்த குடும்பம்

Published

on

அரிய சாதனை படைத்த குடும்பம்

ஒரு குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் ஒரே பிறந்த திகதி இருப்பதை உங்களால் கற்பனை செய்ய முடியுமா? எப்படி இருக்க வாய்ப்பே இல்லை என்று நினைக்கலாம்.

ஆனால், பாகிஸ்தானைச் சேர்ந்த இந்தக் குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒரே நாளில் பிறந்த நாளைக் கொண்டாடுகின்றனர்.

பாகிஸ்தானின் லர்கானாவைச் சேர்ந்த அமீர் அலியின் குடும்பத்தினர் ஒரே திகதியில் பிறந்ததற்காக, அந்த குடும்பம் கின்னஸ் சாதனை படைத்துள்ளது. இந்த அற்புதமான கதையை கின்னஸ் உலக சாதனை புத்தகம் பகிர்ந்துள்ளது.

அமீர் அலி பாகிஸ்தானின் லர்கானாவை பூர்வீகமாக கொண்டவர். அலியின் குடும்பம் அவரது மனைவி குதேஜா மற்றும் ஏழு குழந்தைகளைக் கொண்டது.

7 குழந்தைகளில் நான்கு பேர் இரட்டையர்கள். அனைவரும் 19 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்கள். தற்செயலாக எல்லோருடைய பிறந்தநாளும் ஆகஸ்ட் 1-ஆம் திகதி ஆகும்.

ஆமிர் மற்றும் குதேஜாவின் திருமண நாளும் ஆகஸ்ட் 1 தான் என்பது மற்றொரு ஆச்சரியம். அலி மற்றும் குதேஜா ஆகஸ்ட் 1, 1991-ல் திருமணம் செய்து கொண்டனர்.

இந்த குடும்பம் இரண்டு அரிய சாதனைகளைக் கொண்டுள்ளது. முதலாவது, ஒரே திகதியில் ஒன்பது குடும்ப உறுப்பினர்கள் பிறந்ததற்கான உலக சாதனை, மற்றொன்று அதே திகதியில் பிறந்த அதிக உடன்பிறப்புகளுக்கான சாதனை.

முன்னதாக, அமெரிக்காவைச் சேர்ந்த கம்மின்ஸ் குடும்பம் ‘ஒரே திகதியில் பிறந்த பெரும்பாலான உடன்பிறப்புகள்’ என்ற சாதனையைப் படைத்தது. 1952 முதல் 1966 பிப்ரவரி 20-ஆம் திகதியில் கம்மின்ஸ் குடும்பத்தில் ஐந்து குழந்தைகள் பிறந்தன. உலகில் உறுதிப்படுத்தப்பட்ட ஒரே உதாரணம் இதுதான்.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version