உலகம்

உக்ரைனில் அபாயகரமான கிளஸ்டர் குண்டுகளை குவிக்கும் அமெரிக்கா!

Published

on

உக்ரைனில் அபாயகரமான கிளஸ்டர் குண்டுகளை குவிக்கும் அமெரிக்கா!

உக்ரைன் இராணுவத்திற்கு ‘கிளஸ்டர்’ குண்டுகளை வழங்குவது குறித்து அமெரிக்கா ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேற்கத்திய நாடுகளின் உதவியோடு ரஷ்யாவை எதிர்த்து உக்ரைன் போரிட்டு வரும் நிலையில், உக்ரைனின் பல்வேறு பகுதிகளை ரஷ்ய இராணுவம் தனது கட்டுப்பாடுக்குள் கொண்டு வந்துள்ளது.

இந்த சூழலில் ரஷ்யாவிற்கு எதிரான தாக்குதலை தீவிரப்படுத்தும் முயற்சியில் உக்ரைன் இராணுவம் ஈடுபட்டு வரும் நிலையில், கிளஸ்டர்’ குண்டுகளை வழங்குவது குறித்து அமெரிக்கா ஆலோசித்து வருகின்றது.

இந்நிலையில், இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தங்களுக்கு ஆயுத உதவிகளை வழங்க வேண்டும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கோரிக்கை விடுத்துள்ளார்.

உக்ரைன் – ரஷ்ய போர் தொடங்கி 500 நாட்களை நெருங்கும் நிலையில், தற்போது ‘கிளஸ்டர்’ ஆயுதங்களுக்கான தேவை வலுத்திருப்பதாக கூறி அவற்றை வழங்குமாறு அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு ஜெலன்ஸ்கி அழுத்தம் கொடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

உக்ரைன் இராணுவத்திற்கு அபாயகரமான ‘கிளஸ்டர்’ குண்டுகளை வழங்குவது குறித்து அமெரிக்கா ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் ‘கிளஸ்டர்’ குண்டு எனப்படும் கொத்து குண்டுகள் மிகவும் ஆபத்தை விளைவிக்கும் ஆயுதமாக பார்க்கப்படுவதுடன்,குண்டுகள் மோசமான பாதிப்புகளையும், உயிரிழப்புகளையும் ஏற்படுத்தும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகளின் மாநாட்டில் இதுபோன்ற ஆயுதங்கள் பயன்படுத்துவது முற்றிலும் தடை செய்யப்பட வேண்டும் என 100 நாடுகள் கையொப்பமிட்டுள்ளன.

இருப்பினும், ஆபத்து அதிகம் இருந்தாலும், சில சந்தர்ப்பங்களில் இவற்றை பயன்படுத்த வேண்டிய கட்டாயம் இருப்பதாக கூறி அமெரிக்கா, ரஷ்யா, உக்ரைன் மற்றும் இந்தியா ஆகியவை இந்த உடன்படிக்கையில் கையெழுத்திடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version