உலகம்
உலகின் மிகப்பெரிய சொக்லைட் பெட்டிக்கு கின்னஸ் சாதனை
உலகின் மிகப்பெரிய சொக்லைட் பெட்டிக்கு கின்னஸ் சாதனை
அமெரிக்காவின் ரஸ்ஸல் ஸ்டோவர் நிறுவனம், உலகின் மிகப்பெரிய சொக்லைட் பெட்டியை தயாரித்து கின்னஸ் உலக சாதனையை தனதாக்கியுள்ளது.
2500 கிலோவுக்கும் அதிக நிறை கொண்ட உலகின் மிகப்பெரிய சொக்லைட் பெட்டியில் ஒன்பது வகை சுவைக கொண்ட சொக்லைட்கள் நிரப்பப்பட்டுள்ளன.
குறித்த சொக்லைட் நிரப்பப்பட்ட பெட்டியானது 9.27 மீ x 4.69 மீ x 0.47 மீ (30.43 அடி x 15.41 அடி x 1.55 அடி) எனும் பரப்பளவை கொண்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 17ம் திகதி அமெரிக்காவின் மிசோரி, கன்சாஸ் நகரில் இது காட்சிபடுத்தப்பட்டதாக உலக சாதனை பராமரிப்பு அமைப்பு மேலும் குறிப்பிட்டுள்ளது.
ரஸ்ஸல் ஸ்டோவர் நிறுவனத்தின் 100வது ஆண்டு விழாவை நினைவுகூரும் வகையில் இந்த புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் அனைத்து உணவு பாதுகாப்பு வழிகாட்டுதல்களும் பின்பற்றப்படுவதை உறுதி செய்வதற்காக மூன்று உணவு ஆய்வாளர்கள் குழு முழு செயல்முறையையும் கண்காணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
You must be logged in to post a comment Login
மறுமொழியை நிராகரி
ஒரு பின்னூட்டத்தை இட நீங்கள் கட்டாயம் உள்நுழைந்திருக்க வேண்டும்.
Pingback: இளம் வீடியோ கேம் டெவலப்பர்; ஆறு வயது கனேடிய சிறுமி கின்னஸ் சாதனை - tamilnaadi.com