உலகம்

8 வயது சிறுமியுடன் இணைந்து புடின் செய்த செயல்

Published

on

8 வயது சிறுமியுடன் இணைந்து புடின் செய்த செயல்

8 வயது சிறுமியுடன் இணைந்து நிதியமைச்சரிடம் நிதி ஒதுக்கீடு குறித்து தொலைபேசியில் உரையாடிய ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மாஸ்கோ-வால் வெளியிடப்பட்டுள்ளது.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இன்று தாகெஸ்தான் பகுதியை சேர்ந்த 8 வயது சிறுமியை கிரெம்ளினுக்கு வரவேற்றார்.

அத்துடன் நிதியமைச்சர் உடனான வழக்கத்துக்கு மாறான தன்னுடைய தொலைபேசியில் அழைப்பில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் சிறுமியின் சொந்த பகுதிக்கான பட்ஜெட் மானியம் தொடர்பான விவரங்களை நேரடியாக கேட்க செய்தார்.

நிதியமைச்சர் அன்டன் சிலுவானோவ் தொலைபேசி அழைப்பில் முதலில் சிறுமியின் வரவேற்பை கேட்டு வியப்படைந்தார் மற்றும் உடனடியாக பதிலளிக்க தவறினார்.

ஆனால் இறுதியில் தெற்கு ரஷ்யாவில் உள்ள சிறுமியின் சொந்த பகுதிக்கு கூடுதல் நிதியை ஒதுக்குவதற்கு சம்மதம் தெரிவித்தார்.

இதற்கிடையில் ரஷ்ய ஜனாதிபதி புடின் சிறுமியிடம் கூறுவதற்கு முன்பு தாகெஸ்தான் பகுதிக்கு 5 பில்லியன் ரூபிள் (£43.7 மில்லியன்) கிடைத்துள்ளது என தெரிவித்தார்.

இந்த தொலைபேசி அழைப்பின் போது புன்னகையுடன் இருந்த ரஷ்ய ஜனாதிபதி புடின், அடுத்து ரஷ்யாவின் பிரதமர் மைக்கேல் மிஷூஸ்டினுக்கு அழைப்பு விடுத்த போதும் 8 வயது சிறுமி ரைசட் அகிபோவா-வை(Raisat Akipova) அருகில் அமர வைத்து இருந்தார்.

கடந்த மாதம் வாக்னர் படையுடன் ஏற்பட்ட சலசலப்புக்கு பிறகு, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் 8 வயது சிறுமி ரைசட் அகிபோவா-வை வரவேற்பது போன்ற வீடியோ காட்சிகள் மாஸ்கோவால் வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியான அனைத்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களில் நாட்டு மக்கள் மீதான ரஷ்ய ஜனாதிபதியின் அக்கறை, நேசம் மற்றும் தன்னுடைய கட்டுப்பாடு போன்றவற்றை வெளிக்காட்டுவதாக அமைந்துள்ளது.

தொலைபேசி அழைப்பின் போது கையில் பூங்கொத்துடன் நின்ற சிறுமி, ஜனாதிபதியின் புடின் வழிகாட்டுதலின் பேரில் அமைச்சர் சிலுவானோவுக்கு நன்றி தெரிவித்தார்.

கடந்த வாரம் ரஷ்ய ஜனாதிபதி புடின் தாகெஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்ததை தொடர்ந்து இந்த நிகழ்வு நடந்துள்ளது, அப்போது வழக்கத்துக்கு மாறாக ஜனாதிபதி புடின் நிறைய மக்கள் கூட்டத்துடன் கலந்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version