உலகம்

கைலாசா நாட்டின் பிரதமரான ரஞ்சிதா?

Published

on

கைலாசா நாட்டின் பிரதமரான ரஞ்சிதா?

சாமியார் நித்யானந்தா உருவாக்கியதாக கூறப்படும் கைலாசா நாட்டின் பிரதமர் ரஞ்சிதா என்ற செய்தி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

பல வழக்குகளில் தேடப்பட்டு வரும் சாமியார் நித்யானந்தா கைலாசா என்ற நாட்டை உருவாக்கியதாக அறிவிப்பை வெளியிட்டார். அதுமட்டுமல்லாமல், அந்நாட்டிற்கு என தனி கொடி, ரூபாய் நாணயங்கள் மற்றும் பாஸ்போர்ட்டை ஆகியவற்றை அறிவித்தார்.

மேலும், பல்வேறு நாடுகளுடன் வர்த்தகம் ரீதியாக ஒப்பந்தம் செய்வது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அண்மையில் வெளியானது. இதனிடையே, நித்யானந்தாவுக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறிய நிலையில் மீண்டும் அவர் நேரலையில் சொற்பொழிவு ஆற்றி வருகிறார்.

கைலாசா சார்பில் ஐ.நா சபை மாநாட்டில் பிரதிநிதிகள் கலந்து கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. கைலாசா என்ற ஒரு நாடே இல்லாத போது பிரதிநிதிகள் எப்படி கலந்து கொள்ள முடியும் என்ற கேள்விகள் எழுந்தன.

இதற்கு விளக்கம் அளித்த ஐ.நா செய்தி தொடர்பாளர்,”அவர்களின் பேச்சு எடுத்துக்கொள்ளப்படாது” எனக் கூறினார். இந்நிலையில், லிங்க்ட் இன் (linkedin) என்ற பக்கத்தில் நித்யானந்தா மாயி சுவாமி என்ற தலைப்பில் ரஞ்சிதாவின் புகைப்படத்துடன் கீழே கைலாசாவின் பிரதமர் என குறிப்பிடப்பட்டிருந்தது. தற்போது, இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version