உலகம்

உக்ரைன் பயணிகள் விமானம்! கொத்தாக கொல்லப்பட்ட பல பேர்

Published

on

உக்ரைன் பயணிகள் விமானம்

உக்ரைன் பயணிகள் விமானத்தை சுட்டு வீழ்த்திய விவகாரத்தில், சர்வதேச நீதிமன்றத்தை நாட கனடா, பிரித்தானியா, சுவீடன் மற்றும் உக்ரைன் நாடுகள் முடிவு செய்துள்ளன.

கடந்த 2020ல் ஈரானிய ராணுவத்தால் சுட்டு வீழ்த்தப்பட்ட உக்ரைன் பயணிகள் விமானம் தொடர்பில் கனடா உட்பட நான்கு நாடுகள் இந்த முடிவுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2020 ஜனவரியில் தெஹ்ரான் அருகே உக்ரேனிய பயணிகள் விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியதில் 176 பேர் கொல்லப்பட்டனர். அதில் பயணம் மேற்கொண்ட கனடா, பிரித்தானியா, சுவீடன் மற்றும் உக்ரைன் நாட்டவர்களுக்காக குழு ஒன்று அமைக்கப்பட்டு, தற்போது ஈரானுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தை நாட முடிவு செய்துள்ளனர்.

ஆனால், அந்த சம்பவம் ஒரு விபத்து என்றே ஈரான் கூறி வருகிறது. அது ஒன்றும் திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்ட தாக்குதல் அல்ல எனவும் வாதிடுகின்றனர். அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே அப்போது இருந்த பதட்டமான சூழலில், ரடாரில் ஏற்பட்ட கோளாறினால், விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது என ஈரான் தரப்பில் விளக்கமளிக்கப்படுகிறது.

ஆனால், 1971 மாண்ட்ரீல் மாநாட்டின் விதிகளின் கீழ் ஈரான் நடுவர் மன்றத்திற்கு அடிபணிய வேண்டும் என்று நான்கு நாடுகளும் முன்பு கோரின. மாண்ட்ரீல் மாநாட்டின் விதி என்பது சிவில் விமானப் போக்குவரத்துக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும் தண்டிக்கவும் நாடுகளுக்கு அனுமதி அளிக்கும் சர்வதேச ஒப்பந்தமாகும்.

இதனிடையே, ஈரானுக்கு எதிராக மக்களை இழப்பீடு கோர அனுமதிப்பதன் மூலம் கனடா சர்வதேச கடமைகளை மீறுவதாக குற்றம் சாட்டி சரவ்தேச நீதிமன்றத்தில் கனடாவுக்கு எதிராக ஈரான் வழக்கு தொடர்ந்துள்ளது.

ஈரானின் புகார் மனு தொடர்பில் ஆராய்ந்து உரிய பதிலளிக்கப்படும் என கனடாவும் அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு, ஒன்ராறியோ நீதிமன்றம் ஒன்று, விமான விபத்தில் கொல்லப்பட்ட 6 கனேடியர்களுக்கு மொத்தம் 81 மில்லியன் டொலர் இழப்பீடு வட்டியுடன் வழங்க வேண்டும் என தீர்ப்பளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version