உலகம்

பிரான்ஸில் பொலிஸாரால் கொல்லப்பட்ட 17 வயது சிறுவனின் உடல் அடக்கம்

Published

on

பிரான்ஸில் பொலிஸாரால் கொல்லப்பட்ட 17 வயது சிறுவனின் உடல் அடக்கம்

பிரான்ஸ் நாட்டின் புறநகர் பகுதியான நாண்டெர்ரே-வில் நெயில் எம்(Nael m) என்ற 17 வயது சிறுவன் பொலிஸாரால் துப்பாக்கியால் சுடப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

இது தொடர்பாக பொலிஸார் தரப்பில் வழங்கிய விளக்கத்தில், போக்குவரத்து விதிகளை மீறியும், பொலிஸாரின் உத்தரவை மீறியும் காரை ஓட்டியதால் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளது.

இதையடுத்து பிரான்ஸ் நாடு முழுவதும் கலவரங்கள் 5வது நாள் இரவாக நடைபெறு வருகிறது.

மொத்தம் 45,000 பொலிஸார்கள் வரை கலவரத்தை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

மேலும் இதில் 2000 கலவரக்காரர்கள் வரை கைது செய்யப்பட்டுள்ளனர், நூற்றுக்கணக்கான பொலிஸ் அதிகாரிகள் படுகாயமடைந்துள்ளனர்.

இந்நிலையில் பொலிஸாரால் சுடப்பட்டு உயிரிழந்த 17 வயது சிறுவன் நெயில் எம்(Nael m) உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு நடத்தப்பட்டது.

நாண்டெர்ரே நகரில் உள்ள இஸ்லாமிய மசூதியில் உடல் வைக்கப்பட்டு தொழுகைகள் நடத்தப்பட்ட பின்னர் அதே பகுதியில் உள்ள மலை உச்சியில் உள்ள கல்லறையில் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

அதற்கு முன்னதாக சிறுவனின் உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்ட நிலையில், நூற்றுக்கணக்கான இளைஞர்கள் கண்ணீருடன் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

 

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version