உலகம்

விளாடிமிர் புடினை கொல்ல போடப்பட்ட சதி திட்டம்

Published

on

விளாடிமிர் புடினை கொல்ல போடப்பட்ட சதி திட்டம்

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள பாலம் ஒன்றில் ரஷ்ய ஜனாதிபதி புடினை வெடி வைத்து கொலை செய்ய மேற்கொள்ளப்பட்ட முயற்சி முறியடிக்கப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு சேவைகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

கிரெம்ளின் இருந்து மாஸ்கோவிற்கு வெளியே உள்ள ரஷ்ய ஜனாதிபதி புடினின் அதிகாரப்பூர்வ இல்லத்திற்கு செல்லும் வழியில் உள்ள ஆற்றுப்பாலம் ஒன்று வெடிமருந்து பதுக்கி வைத்து, அதனை சரியான நேரத்தில் வெடிக்க செய்து புடினை கொலை செய்ய தீட்டப்பட்டு இருந்த சதி திட்டம் முறியடிக்கப்பட்டு இருப்பதாக பெடரல் பாதுகாப்பு சேவைகள்(FSO ) தகவல் தெரிவித்துள்ளது.

VChK-OGPU என்ற டெலிகிராம் சேனல் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், ரஷ்ய ஜனாதிபதி புடினின் வாகனம் செல்லக்கூடும் என எதிர்பார்க்கப்பட்ட பெயரிடப்படாத பாலத்தின் கீழே சந்தேகத்திற்கு இடமான படகு ஒன்று வெடிமருந்துகளை கொட்டி இருக்கலாம் என தகவல்கள் தெரியவந்தது.

இதையடுத்து, புடினை கொலை செய்யும் முயற்சியில் மொஸ்க்வா ஆற்றின் அடிப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமான படகில் இருந்து வெடிமருந்துகள் கொட்டப்பட்டு உள்ளதா என்பதை FSO படைகள் சரி பார்த்து கொண்டு இருந்தனர்.

இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் பரவி அதிக கவனம் ஈர்த்தது.

இந்நிலையில் FSO அதிகாரிகள் படகில் இருந்த பணியாளர்களின் விவரங்களை சரிபார்த்தனர், அதில் பாலத்தை பழுது பார்ப்பதற்காக பணியில் ஈடுபட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ரஷ்ய ஜனாதிபதி புடினை கொலை செய்ய தீட்டப்பட்ட சதி திட்டத்தில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு மற்றும் இத்தகைய செயல்களை செய்தவர்கள் குறித்த எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version