உலகம்
கலவர பூமியான பிரான்ஸ்: பொது போக்குவரத்து ரத்து
கலவர பூமியான பிரான்ஸ்: பொது போக்குவரத்து ரத்து
பிரான்சில் அனைத்து பொது போக்குவரத்தையும் அரசாங்கம் ரத்து செய்துள்ளது.
அல்ஜீரிய-மொராக்கோ வம்சாவளியைச் சேர்ந்த நயேல் என்ற 17 வயது சிறுவனை பொலிசார் சுட்டுக் கொன்றதற்கு பிரான்சில் எதிர்ப்புகள் வெடித்தன.
போராட்டங்களை அடுத்து, வெள்ளிக்கிழமை இரவு முதல் பிரான்சில் அனைத்து பொது போக்குவரத்து அமைப்புகளையும் இடைநிறுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
நாடு முழுவதும் அனைத்து பேருந்து மற்றும் டிராம் சேவைகளும் இரவு 9 மணிக்குப் பிறகு இயங்காது என்று உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டார்மானின் தெரிவித்துள்ளார்.
கலவரம் வெடித்த பிறகு, இறந்த வாலிபரின் தாயும் தனது எதிர்வினையை முன்வைத்தார். எல்லா பொலிஸ்ஸ்காரர்களிடமும் தனக்கு ஆட்சேபனை இல்லை என்றும், தன் மகனைக் கொன்றவனிடம்தான் தனக்குப் பிரச்னை என்றும் தாய் மௌனியா பதில் அளித்துள்ளார். அவர் பிரான்ஸ் 5 தொலைக்காட்சியில் பேசினார்.
அதேநேரம், கலவரம் தீவிரமடைய சமூக வலைதளங்களே காரணம் என பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் (Emmanuel Macron) தெரிவித்துள்ளார்.
மேலும் வாலிபரின் மரணத்தை சிலர் தவறாக பயன்படுத்தியதாக இம்மானுவேல் மக்ரோன் குற்றம் சாட்டினார்.
எதிர்ப்புகள் தணிந்தாலும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வீட்டிலேயே வைத்திருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
இளைஞர்கள் மீது வீடியோ கேம்களின் தாக்கம் கலவரத்திற்கு காரணம் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
You must be logged in to post a comment Login
மறுமொழியை நிராகரி
ஒரு பின்னூட்டத்தை இட நீங்கள் கட்டாயம் உள்நுழைந்திருக்க வேண்டும்.
Pingback: இலங்கைக்கு விரைவில் கிடைக்கவுள்ள பெருந்தொகை டொலர் - tamilnaadi.com