உலகம்

60 ஆண்டுகளாக ஒருமுறை கூட கண்ணுறங்காத விசித்திர நபர்

Published

on

கண்ணுறங்காத விசித்திர நபர்!

வியட்நாம் நாட்டவரான 80 வயது நபர் ஒருவர் கடந்த 60 ஆண்டுகளாக ஒருமுறை கூட கண்ணுறங்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

சிறு வயதில் ஏற்பட்ட காய்ச்சல் காரணமாக இந்த நிலை ஏற்பட்டது என அவர் நம்பினாலும், இந்த சிக்கலுக்கு பின்னால் வியட்நாம் போரும் ஒரு காரணம் என கூறுகின்றனர்.

தற்போது 80 வயதாகும் Thai Ngoc என்ற முதியவர், கடந்த 1962ல் இருந்தே நிரந்தரமாக தூக்கமின்மையால் அவதிப்பட்டு வருகிறார். Thai Ngoc என்பவரின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் எவரும், இவர் ஒருமுறை கூட தூங்கியதாக பார்த்ததில்லை என கூறுகின்றனர்.

பல தரப்பு மருத்துவ நிபுணர்கள் Thai Ngoc அனுபவிக்கும் இந்த நிலையை ஆய்வு செய்தும், இதுவரை அவர்களால் எந்த முடிவுக்கும் வர முடியவில்லை என்றே கூறப்படுகிறது.

மட்டுமின்றி தூக்கம் இல்லாமல் அவர் இருந்தாலும் உடல் நிலையில் நன்றாக இருக்கிறார் எனவும், ஓய்வு இல்லாததால் இருந்தால் கூட அவருக்கு எந்த மருத்துவ பாதிப்பும் இல்லை எனவும் நிபுணர்கள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளனர்.

கடந்த 60 ஆண்டுகளில் ஒரு நொடி தூக்கத்தில் ஆழ்ந்ததாக கூட தமக்கு நினைவில் இல்லை என்கிறார் அவர். மேலும், கிரீன் டீ மற்றும் அரிசி உணவில் இருந்து தயாரிக்கப்படும் மது ஆகியவற்றில் இருந்து தான் தமக்கு தேவையான ஆற்றலை பெறுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் வியட்நாம் போரில் தமது கை சேதமடைந்த பின்னர், அவர் தூங்குவதை பார்த்ததில்லை என்கிறார் உறவினர் ஒருவர். போர் சூழல் காரணமாக ஏற்படும் உளவியல் பாதிப்பும் ஒரு காரணம் என நிபுணர்கள் தரப்பு சுட்டிக்காட்டுகின்றனர்.

வியட்நாமில் 1955 முதல் 1975 வரையான காலகட்டத்தில் கடுமையான போர் நடந்துள்ளது. அதில் ஒரு கை பாதிக்கப்பட்டவர் Thai Ngoc. தற்போது பகல் முழுவதும் விவசாயத்தில் ஈடுபடும் Thai Ngoc, இரவானால் மது தயாரிக்கும் பணியில் ஈடுபடுவாராம்.

தூக்கமின்மை இருந்தாலும், விடிகாலை 4 மணியளவில் கொஞ்ச நேரம் படுத்துக்கொள்வாராம். ஆனால் தூங்குவதில்லை என்கிறார்கள் உறவினர்கள்.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version