உலகம்

ஐ.எஸ் பயங்கரவாதிகளின் அடுத்த இலக்கு: எச்சரிக்கை விடுத்த இராணுவ தளபதி

Published

on

ஐ.எஸ் பயங்கரவாதிகளின் அடுத்த இலக்கு: எச்சரிக்கை விடுத்த இராணுவ தளபதி

பிரித்தானியாவை சேர்ந்த ஐஎஸ் தீவிரவாதிகள் நாட்டில் பெரும் தாக்குதலுக்கு திட்டமிட்டு வருவதாக ராணுவ தளபதி ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஈராக்கின் பயங்கரவாத தடுப்பு பிரிவின் மூத்த அதிகாரியான தளபதி அப்துல் வஹாப் எல்-சாதி விடுத்துள்ள எச்சரிக்கையில், பிரித்தானியாவை தங்களின் அடுத்த இலக்காக மாற்ற ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு திட்டமிட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

தளபதி அப்துல் வஹாப் எல்-சாதி தெரிவிக்கையில், அவரது கோல்டன் டிவிஷன் சிறப்புப் படைப் பிரிவு பாலைவன மறைவிடத்தின் மீது நடத்திய சோதனையின் போது அதிர்ச்சியூட்டும் பல திட்டங்களைக் கண்டுபிடித்ததாக கூறியுள்ளார்.

ஈராக்குக்கு வெளியே, ஐஎஸ் தீவிரவாதிகளில் முதன்மையான இலக்கு பிரித்தானியா என அதில் இருந்து கண்டறிந்ததாக தெரிவித்துள்ளார். பிரித்தானியா மீதான தாக்குதல் திட்டங்களுக்கு பிரித்தானிய நாட்டவர்களான ஐஎஸ் தீவிரவாதிகளையே அவர்கள் பயன்படுத்த இருப்பதாகவும் தளபதி அப்துல் வஹாப் எல்-சாதி குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், தங்களது அமைப்பு அந்த தாக்குதல் திட்டங்களை முறியடிக்க துணிந்து செயல்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் அதிகம் புழங்கும் பகுதிகள் அல்லது அதிக மக்கள் வாழும் பகுதிகளை அவர்கள் இலக்கு வைத்துள்ளதாகவும், ஆனால், வெடிகுண்டு தாக்குதலா அல்லது துப்பாக்கிச் சூடு சம்பவமா என்பது தொடர்பில் தங்களால் உறுதி செய்ய முடியவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

இப்படியான ஒரு தாக்குதல் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் முன்னெடுக்கப்பட்டால் அதன் பின்னணியில் அவர்கள் என உறுதி செய்யலாம் என்றார். மேலும், தங்களுக்கு கிடைத்துள்ள மொத்த தரவுகளையும் பிரித்தானிய நிர்வாகத்திடம் ஒப்படைத்துள்ளதாகவும் தளபதி அப்துல் வஹாப் எல்-சாதி குறிப்பிட்டுள்ளார்.

ஐரோப்பாவில் பிரித்தானியா, பிரான்ஸ், பெல்ஜியம் மற்றும் ஜேர்மனி ஆகிய நான்கு நாடுகளை அவர்கள் தெரிவு செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். 1999ல் நிறுவப்பட்ட ஐ.எஸ் அமைப்பானது 2010 மத்தியில் ஈராக் மற்றும் சிரியாவின் பெரும் பகுதிகளை கைப்பற்றியதுடன் பல சர்வதேச பயங்கரவாத தாக்குதல்களையும் நடத்தியது.

2015ல் பாரிஸ் தாக்குதல் சம்பவத்தில் 131 பேர் கொல்லப்பட்டனர். 2017 மான்செஸ்டர் அரங்கம் வெடிகுண்டு தாக்குதலில் சிறார்கள் உட்பட 22 பேர் கொல்லப்பட்டனர்.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version