உலகம்

நீச்சல் குளத்தில் பெண்கள் மேலாடையின்றி குளிக்க அனுமதி

Published

on

நீச்சல் குளத்தில் பெண்கள் மேலாடையின்றி குளிக்க ஸ்பெயின் நாட்டு அரசு அனுமதி அளித்துள்ள விஷயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்பெயின் நாட்டின் தலைநகரம் பார்சிலோனா. இது உலகின் சிறந்த சுற்றுலா தலங்களில் ஒன்று.

கடந்த 2020ம் ஆண்டு ஸ்பெயின் நாட்டு அரசு நீச்சல் குளங்களில் பெண்கள் மேலாடையின்றி குளிக்க அனுமதி கொடுத்து, சட்டமும் இயற்றப்பட்டது. ஆனால், சில நகராட்சி இச்சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் இவை நிறுத்தி வைக்கப்பட்டது.

தற்போது, பெண்கள் மேலாடையின்றி குளிக்கலாம் என்று ஸ்பெயின் அரசு அனுமதி கொடுத்து உத்தரவிட்டுள்ளது. இதில் யாருக்கும் பாரபட்சம் காட்டக்கூடாது என்று உள்ளூர் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், பெண்கள் மேலாடையின்றி செல்வதை யாரும் தடுக்கக்கூடாது என்றும், அது அவரவர்களின் உடல் சார்ந்த தேர்வு சுதந்திரம் என்றும் பாலினம், உடை விஷயங்களில் யாருக்கும் பாகுபாடின்றி உள்ளூர் அதிகாரிகள் மக்களை பாதுகாக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

ஆனால், மக்கள் கூடும் நகர மண்டபங்களில் மேலாடை இல்லாமல் குளிக்க முடியாது. அப்படி விதி மீறினால் சுமார் ரூ. 4 கோடி வரை அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நீச்சல் குளத்தில் பெண்கள் மேலாடையின்றி குளிக்கலாம் என்று அரசு அனுமதி அளித்துள்ளதற்கு பலர் மகிழ்ச்சியோடு கொண்டாடி வருகின்றனர்.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version