உலகம்

பிரான்சின் இரண்டாவது பெரிய நகரின் அவல நிலை

Published

on

பிரான்ஸ் நாட்டின் இரண்டாவது பெரிய நகரமாக விளங்கும் நகரம் Marseille. ஆனால், அங்கு போக்குவரத்து பிரச்சினைகள் முதல் பல்வேறு வசதிக்குறைவுகள் காணப்படுகின்றன.

போதைப்பொருள் கும்பல்கள் காணப்படும் அந்நகரத்தில் இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 23 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரான் மூன்று நாள் பயணமாக Marseille சென்றுள்ளார். பாரீஸுக்கு அடுத்தபடியாக பிரான்சின் இரண்டாவது பெரிய நகரமாக Marseille விளங்கினாலும், அது பிரான்சின் வறுமை மிகுந்த நகரமாகவும் காணப்படுகிறது.

சரியான உள் கட்டமைப்பு இல்லாமலும், பல வீடுகள் சரியான பராமரிப்பு இல்லாமலும் காணப்படும் Marseille நகரின் வடக்கு பகுதியில் பெருமளவில் போதைப்பொருள் பிரச்சினையும் காணப்படுகிறது.

2021ஆம் ஆண்டு, Marseille நகருக்கு புதிய பொலிசாரை தேர்ந்தெடுப்பதற்காகவும், பள்ளிகளையும் பொது கட்டிடங்களையும் புதுப்பிப்பதற்காகவும், போக்குவரத்தை தரம் உயர்த்துவதற்காகவும், மேக்ரான் 5 பில்லியன் யூரோக்கள் வழங்க இருப்பதாக வாக்களித்திருந்தார்.

இந்நிலையில், Marseille நகர போக்குவரத்தை மேம்படுத்துவதற்காக வழங்குவதாக உறுதியளித்திருந்த தொகையை இரட்டிப்பாக்கி 500 மில்லியன் யூரோக்கள் வழங்க இருப்பதாக இன்று தெரிவித்துள்ளார் அவர்.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version