உலகம்

இம்ரான்கானுக்கு நீதிமன்றம் பிடியாணை உத்தரவு

Published

on

இம்ரான்கானுக்கு நீதிமன்றம் பிடியாணை உத்தரவு

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு நீதிமன்றம் பிடியாணை உத்தரவை பிறப்பித்துள்ளது. பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான இம்ரான் கானின் ஆட்சி கவிழ்ப்புக்கு பின்னர் ஷெபாஸ் ஷெரிப் பாகிஸ்தான் பிரதமராக பதவி வகித்து வருகிறார். இதனை கண்டித்து தனது ஆதரவாளர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டார் இம்ரான்கான்.

இந்தநிலையில் இம்ரான்கான் மீது ஊழல், பணமோசடி உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்து வழக்குகள் பதிந்து விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் இதுகுறித்தான வழக்கில் நீதிமன்றில் முன்னிலையாக இம்ரான்கானுக்கு உத்தரவிடப்பட்டது. அப்போது அவரை சுற்றிவளைத்து இராணுவவீரர்கள் கைது செய்து பின்னர் விடுவித்தனர்.

இதனால் அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் குதித்தனர். அப்போது நாட்டின் பல்வேறு பகுதிகளில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது. இந்தநிலையில் நேற்று இம்ரான்கான் உள்ளிட்ட அவரது கட்சி தலைவர்களுக்கு பிடியாணை பிறப்பித்து லாகூரில் உள்ள பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் நீதிமன்றம் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. மேலும் இந்த வழக்கில் முன்னாள் விமான போக்குவரத்து அமைச்சர் குலாம் சர்வாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version