உலகம்
மோடியின் பயணம் சீனா ரஷியா பற்றியது அல்ல!!
மோடியின் பயணம் சீனா ரஷியா பற்றியது அல்ல!!
இந்திய பிரதமர் மோடி அரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். ஐ.நா. தலைமையகத்தில் இன்று நடைபெறும் சர்வதேச யோகா தினத்தில் கலந்து கொள்கிறார். அதன்பின் வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்திக்கிறார். அப்போது இருநாட்டு தலைவர்களும் பல்வேறு அம்சங்கள் குறித்து பேசவாய்ப்புள்ளது.
குறிப்பாக இந்தோ-பசிபிக் பாதுகாப்பு குறித்து பேசப்படும் எனத்தெரிகிறது. ஆனால் ரஷியா அல்லது சீனா குறித்து பேச்சு இடம்பெறாது என வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் ஒருங்கிணைப்பாளர் ஜான் கிர்பி தெரிவித்துள்ளார். இதுகுறித்து கிர்பி கூறுகையில் ”இந்திய பிரதமர் மோடியின் வருகை சுதந்திரமான, திறந்த, வளமான மற்றும் பாதுகாப்பான இந்தோ- பசிபிக் பகுதிக்கான பகிரப்பட்ட உறுதிப்பாட்டை வலுப்படுத்தும்.
இருநாட்டின் உறவை மேம்படுத்துவதற்கான சந்திப்பாக இருக்கும். இதுதான் எங்களுக்கு முக்கியம். இந்த சந்திப்பு மூலம் பிரதமர் மோடியையோ அல்லது இந்திய அரசையோ வேறு ஏதாவது செய்ய வற்புறுத்துவது அல்ல. வெள்ளை மாளிகையில் இது ஒரு பெரிய வாரம். மோடியின் இந்த பயணம் இரு நாடுகளுக்கும் இடையே உள்ள வலுவான உறவுகளை உறுதிப்படுத்துவதுடன் நமது மூலோபாய கூட்டாண்மையை உயர்த்தும். இந்தியா- அமெரிக்கா இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு மேம்படுத்த விரும்புகிறோம். இந்தியா மபெரும் சக்தியாக உருவெடுக்க நாங்கள் ஆதரவு அளிப்போம். மோடியின் அமெரிக்க வருகை ரஷியா அல்லது சீனா குறித்தது அல்ல” என்றார்.
You must be logged in to post a comment Login