உலகம்

ரஷ்யாவின் சொத்துக்களை பறிமுதல் செய்யும் நாடு!!

Published

on

ரஷ்யாவின் சொத்துக்களை பறிமுதல் செய்யும் நாடு!!

பறிமுதல் செய்யப்பட்ட மற்றும் முடக்கப்பட்ட ரஷ்யா சொத்துக்களை தக்கவைத்துக்கொள்ள அனுமதிக்கும் சட்டத்தை பிரித்தானியா அறிமுகப்படுத்தியுள்ளது. ரஷ்யா அரசு மற்றும் தனிநபர்களுக்கு சொந்தமான முடக்கப்பட்ட சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படுவதை சட்டம் உறுதி செய்யும், அத்தகைய நடவடிக்கையை எடுக்கும் முதல் ஐரோப்பிய அரசாங்கம் என பிரித்தானியா மாறவிருக்கிறது.

இதுவரையான காலபகுதியில், சுவிட்சர்லாந்து உட்பட பல மேற்கத்திய அரசாங்கங்கள், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் அழுத்தம் அதிகரித்துள்ள போதிலும், ரஷ்ய நிதிகளை பறிமுதல் செய்வதிலிருந்து விலகியிருக்கின்றன. குறித்த சட்டத்தின் ஊடாக உக்ரைனுக்கு இழப்பீடு வழங்கப்படும் வரை பிரித்தானிய அரசாங்கம் அதன் தடைகளை நடைமுறையில் வைத்திருப்பது மட்டுமின்றி பறிமுதல் செய்யப்பட்ட தொகையை உக்ரைனுக்கு வழங்கவும் வழி செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை வெளிநாடுகளில் வைத்திருக்கும் மேற்கத்திய நாடுகளின் சொத்துக்களும் கைப்பற்றப்படுவதற்கு இது ஒரு முன்னுதாரணமாக அமையும் என்றும், இதனால் ஐரோப்பிய வங்கி முறையின் மீதான முதலீட்டாளர்களின் நம்பிக்கையைப் பாதிக்கும் என்ற அச்சமும் இந்த விவகாரத்தில் உள்ளது. முடக்கம் புதிதாக விதிக்கப்பட்டுள்ள தடைகளின் கீழ் கொண்டுவரப்பட்ட எந்தவொரு தனிநபரும் பிரித்தானியாவில் உள்ள தங்களது அனைத்து சொத்துக்களையும் வெளியிட வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

விதிகளுக்கு இணங்கத் தவறினால் அபராதம் அல்லது நிதி பறிமுதல் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. பிரித்தானியாவை பொறுத்தமட்டில் உக்ரைன் போருக்கு பின்னர் ரஷ்யாவுக்கு சொந்தமான 26 பில்லியன் பவுண்டுகள் தொகையை முடக்கி வைத்துள்ளது. மொத்தத்தில், மேற்கத்திய அரசாங்கங்கள் சுமார் 300 பில்லியன் டொலர்கள் ரஷ்ய மத்திய வங்கி சொத்துக்களை முடக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version