உலகம்

இத்தாலியில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட தமிழின அழிப்பு நினைவு நாள்!

Published

on

இத்தாலியில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட தமிழின அழிப்பு நினைவு நாள்!

18 மே, தமிழின அழிப்பு நாளை முன்னிட்டு, சிறீலங்கா அரசால் ஈழத்தமிழர்கள் மீது தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் இன அழிப்பினால் படுகொலை செய்யப்பட்டு வரும் தமிழ் மக்கள் நினைவாக இத்தாலியில் Palermo, Biella மாற்று Reggio Emilia நகரங்களில் வணக்க நிகழ்வுகள் இடம்பெற்றன.

அவ் வகையில் Biella நகரில் சென்ற ஆண்டு Valdilana வில் Piazza XXV Aprile எனும் இடத்தில் நடுகையிட்ட மரம் மற்றும் நினைவு தடத்திற்கு முன்னராக வணக்க நிகழ்வுகள் இடம்பெற்றன. Valdilana நகரசபையின் முதல்வர் Mario Carli மற்றும் தமிழ்த் தேசிய கட்டமைப்புகளின் உறுப்பினர்கள் மற்றும் Valdilana வாழ் தமிழ் மக்களின் பங்கேற்புடன் இந் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றன. வணக்கநிகழ்வுகளைத் தொடர்ந்து, முள்ளிவாய்க்கால் நினைவு சுமந்த கவிதைகள், தமிழின அழிப்பு தொடர்பாக இளையோர்களின் கருத்துகள், முதல்வர் மாரியோ கார்லியின் சிறப்புரை மற்றும் தமிழின அழிப்பு நாள் சிறப்புரை என்பன இடம்பெற்றிருந்தன. நிகழ்வின் இறுதியில் தமிழீழத் தேசியக்கொடி இறக்கப்பட்டு, “நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்” என்ற பாடல் இசைக்கப்பட்டதுடன் உறுதிமொழி எடுக்கப்பட்டது.

#world

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version