இலங்கை

அமெரிக்காவில் இலங்கை மாணவருக்கு கிடைத்த கௌரவம்!

Published

on

அமெரிக்காவில் இலங்கை மாணவருக்கு கிடைத்த கௌரவம்!

அமெரிக்காவின் தென்மேற்கு சட்டக்கல்லூரியில் கல்வி கற்கும் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த டிலான் மஹேன் குணரத்ன 2023 ஆம் ஆண்டு அமெரிக்காவின் சிறந்த சட்டக் கல்லூரி மாணவருக்கான விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

‘தென்மேற்கு சட்டக் கல்லூரியின்’ பட்டமளிப்பு விழா எதிர்வரும் 19ஆம் திகதி நடைபெறவுள்ளதுடன், சட்டக்கல்லூரி மாணவர்களுக்கான விசேட உரையொன்றை ஆற்றுவதற்கு டிலான் மகேன் குணரத்ன தெரிவுசெய்யப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.

தென்மேற்கு சட்டக் கல்லூரியில் சிறப்புரை ஆற்றுவதற்கு இலங்கையின் சட்டக்கல்லூரி மாணவர் ஒருவர் தெரிவு செய்யப்பட்டமை இதுவே முதல் தடவையாகும்.

கனடாவில் பிறந்த டிலான் மஹேன் குணரத்னவின் பெற்றோர் இலங்கையர்கள். டிலான் அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸில் உள்ள கால் ஸ்டேட் யுனிவர்சிட்டியில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.

அதன்பிறகு கனடாவின் டொராண்டோவில் ‘ஒய்டிவி’ சனலில் பணியாற்றினார். 75,000 அமெரிக்க டொலர் உதவித்தொகையை பெற்று ‘தென்மேற்கு’ சட்டக்கல்லூரியில் நுழைந்துள்ளார்.

#world

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version