உலகம்

ஆபாசமாக புகைப்படம் எடுத்தால் 3 ஆண்டுகள் சிறை!

Published

on

ஆபாசமாக புகைப்படம் எடுத்தால் 3 ஆண்டுகள் சிறை!

பாலியல் வன்முறை மற்றும் பாலியல் வல்லுறவிற்கு  எதிரான நடவடிக்கையை ஜப்பான் அரசு தீவிரமாக்கி வருகின்றது.

திருமணம் செய்வதற்கான  வயதை அதிகரித்தல்,  பாலியல் வல்லுறவு பற்றிய வரையறையை மறுசீரமைப்பது மற்றும்  தண்டனையை கடுமையாக்குவது போன்ற  பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருகின்றது.

வளர்ச்சியடைந்த நாடுகளில் திருமணத்துக்கான உரிய வயது ஜப்பானில் மிகவும்  குறைவாகவே காணப்படுகின்றது.  ஜி7  நாடுகளுடன் ஒப்பிடுகையில் இது மிகவும் குறைவாகவும்.

2019 இல்  அதிகளவான  பாலியல் குற்றங்களில், குற்றங்களை நிரூபிக்க முடியாததைக்  கண்டித்து, அங்கு மிகப் பெரிய எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனால், பாலியல் குற்றங்களுக்கு எதிரான ஒரு சீர்திருத்தத்தினை  அந்நாடு மேற்கொண்டு வர தீர்மானித்துள்ளது.

அந்த வகையில், அதன் ஒரு அங்கமாக , மற்றவர்களின் முறையான அனுமதியின்றி பாலியல் மோகத்துடன் புகைப்படங்கள் மற்றும்  வீடியோக்களை எடுப்பதற்கு  தடை விதிக்கும் மசோதாவை ஜப்பான் நாடாளுமன்றம்  கொண்டு வர திட்டமிட்டுள்ளது.

பாலியல் மோகத்தை தூண்டும்  புகைப்படங்களால் எண்ணற்ற குழந்தைகளும், பெண் விளையாட்டு வீரர்களும், விமானப் பணி பெண்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதனால்,  பாலியல் இச்சையைத் தூண்டக்கூடிய வகையில் புகைப்படம் எடுப்பதை இச்சட்டம் தடை செய்கின்றது.

ஒரு பெண் உடை மாற்றும் செய்கின்ற பொழுதோ  அல்லது பாலுறவில் இருக்கும் பொழுதோ  அவரை ரகசியமாக படம் பிடிப்பதும்  குற்றமாக கூறப்பட்டுள்ளது.

குறித்த சட்டத்தின் மூலம் குற்றவாளிகளுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது 3 மில்லியன் ஜப்பானிய யென் (£17,500; $22,000) வரை அபராதம் விதிக்கப்படும் என்பதுடன்  இந்த ஆண்டு ஜூன் மாதம் சீர்திருத்தங்கள் நிறைவேற்றப்படும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

 

#world

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version