உலகம்
அமெரிக்காவுக்கு வடகொரியா பகிரங்க எச்சரிக்கை!
தென்கொரியாவுடன் அமெரிக்கா மேற்கொண்டுள்ள அணு ஆயுத ஒப்பந்தமானது அந்த இரு நாடுகளுக்கும் தீவிர ஆபத்தை ஏற்படுத்தும்’ என கிம் யோ ஜாங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கொரிய தீபகற்ப பகுதியில் சமீப காலமாக வடகொரியாவின் அணு ஆயுத சோதனைகளால் தொடர் பதற்றம் நிலவி வருகிறது. இதனால் தங்களது நாட்டின் பாதுகாப்பு கருதி அமெரிக்காவுடன் இணைந்து தென்கொரியா கூட்டுப்போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கடந்த 26-ந் தேதி அமெரிக்காவின் அணு ஆயுத நீர்மூழ்கிக்கப்பலை தனது நாட்டின் கடற்பகுதியில் நிறுத்தும் ஒப்பந்தத்தில் தென்கொரியா கையெழுத்திட்டது. இது தென்கொரியாவின் மீது அமெரிக்காவின் அணுசக்தி பாதுகாப்பை வலுப்படுத்தும் என கூறப்படுகிறது.
இந்த நிலையில் வடகொரிய தலைவரின் சகோதரி கிம் யோ ஜாங் இது குறித்து கூறும்போது, `தென்கொரியாவுடன் அமெரிக்கா மேற்கொண்டுள்ள அணு ஆயுத ஒப்பந்தமானது அந்த இரு நாடுகளுக்கும் தீவிர ஆபத்தை ஏற்படுத்தும்’ என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
#world
You must be logged in to post a comment Login