உலகம்

டிக்டாக் சவாலால் உயிாிழப்பு!

Published

on

அமெரிக்காவின் ஓஹியோவை சேர்ந்த 13 வயது சிறுவன் டிக்டாக்கில் வைரலான ஒரு விபரீத சவாலுக்கு, தன்னை ஈடுபடுத்தி கொண்ட போது பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

டிக்டாக்கில் Benadryl Challenge” எனப்படும் இந்த ட்ரெண்டில் ஆண்டிஹிஸ்டமைன் எனும் போதை மாத்திரைகளை டிக்டாக் வீடியோ செய்து கொண்டே உட்கொள்ள வேண்டும். அந்த மாத்திரைகளை உட்கொள்ளும் போது உடலுள் ஏற்படும் மாற்றத்தையும், வீடியோவில் பதிவு செய்ய வேண்டும்.இதுவே இந்த ட்ரெண்டின் விதியாகும்.

ஜேக்கப் ஸ்டீவன்ஸ் என்ற அந்த சிறுவன் போதை அடைவதற்காக 12 முதல் 14 மாத்திரைகளை உட்கொண்டார், அதனால் அவரது உடலில் ஆண்டிஹிஸ்டமைனின் அளவு உச்சத்தை அடைந்துள்ளது.இதனால் மூளையின் செயல்திறன் பாதிக்கப்பட்டு, மயக்க நிலை அடைந்துள்ளார். பின்னர் அவர் பெற்றோரால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆண்டிஹிஸ்டமைன் ஒரு வகை மருந்து பொருளாகும். இதனை அளவிற்கு மீறி உட்கொள்வதால் உண்டாகும் போதைக்கு அமெரிக்க இளைஞர் அடிமையாவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இளைஞன் சரியாக ஒரு வாரத்திற்கு செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்டு  வைக்கப்பட்டுள்ளார். அதன் பின் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

டிக்டாக்கின் வெளியான விபரீத சவாலை முயற்சித்த பிறகு, அந்த சிறுவன் மாத்திரைகளை எடுக்க தொடங்கியதாக அவரது நண்பர்கள் படம்பிடித்த வீடியோ காட்டுகிறது.அது அவரது உடலுக்கு மிகவும் அதிகமாக இருந்தது, என்று ஜேக்கப்பின் தந்தை கூறியுள்ளார். ஜேக்கப்பின் தந்தை, ஜஸ்டின் ஸ்டீவன்ஸ், ABC6 இடம், தனது மகன் கடந்த வார இறுதியில் நண்பர்களுடன் வீட்டில் இருந்ததாகக் கூறினார்.

இன்னொரு குழந்தைக்கு இது போல் நடக்காமலிருக்க என்னால் முடிந்த அனைத்தையும் செய்யப் போகிறேன் என்று ஜேக்கப்பின் பாட்டி கூறியுள்ளார்.பெனாட்ரில் போன்ற மருந்துகளை வாங்குவதற்கு சட்டமியற்றுபவர்களுக்கு, வயதுக் கட்டுப்பாடு விதிக்க அவர்கள் போராட போவதாக தெரிவித்துள்ளனர்.

#world

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version