உலகம்
ரஷ்யாவில் எாிமலை வெடிப்பு!
ரஷ்யாவின் கம்சாட்க் தீபகற்பத்தில் உள்ள ஷிவேலுச் எாிமலை வெடித்து சிதற தொடங்கியது. சுமார் 10 கிலோ மீட்டர் உயரத்துக்கு சாம்பல் எழும்பி இருக்கிறது. மேலும் 15 கிலோ மீட்டர் உயரத்துக்கு சாம்பல் வெடிப்புகள் எந்த நேரத்திலும் ஏற்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எரிமலை வெடிப்பு காரணமாக விமான போக்குவரத்துக்கான குறியீடு சிவப்பு எச்சரிக்கையாக வெளியிடப்பட்டுள்ளது. எரிமலை வெடிப்பால் ஏற்பட்டுள்ள சாம்பல் விமானங்களை பாதிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எரிமலையை சுற்றியுள்ள பல கிராமங்களில் சாம்பல் படர்ந்து இருக்கிறது. இது 3.35 அங்குலங்களாக உள்ளது. இது 60 ஆண்டுகளில் இல்லாத அளவாகும். இதையடுத்து பள்ளிகளை மூட உத்தரவிட்டுள்ள அதிகாரிகள் மக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தி உள்ளனர்.
#world
You must be logged in to post a comment Login