இலங்கை

இலங்கையில் சீனாவின் ராடர் தளம்!!

Published

on

ராடர் தளமொன்றை இலங்கையில் நிர்மாணிக்க சீனா திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தியப் பெருங்கடலில் அமையப்பெற்றுள்ள இந்திய மற்றும் அமெரிக்காவின் இராணுவத்தளங்களை உளவு பார்ப்பதற்காக இந்த ராடர் தளத்தை சீனா இலங்கையில் அமைக்கவுள்ளது.

இலங்கை உளவு துறை தரப்புக்களால் இந்த திட்டம் தொடர்பிலான தகவல் வெளிக்கொணரப்பட்டுள்ளதாக பிரிட்டன் இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.

சீனா இலங்கைக்கு வழங்கிய கடன்களின் ஆதாய நடவடிக்கையாக இந்த திட்டம் அமைந்துள்ளதென நிபுணர்களை கோடிட்டு குறித்த இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த ராடர் தளமானது மாத்தறை பகுதியில் தெவுந்தர முனைக்கு அருகிலுள்ள அடர்ந்த வனப்பகுதியில் அமைக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இந்திய கடற்பரப்பின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள இந்திய கடற்படை முகாம்கள், டியாகோ கார்சியாவிலுள்ள அமெரிக்க மற்றும் பிரித்தானிய இராணுவத்தளங்களை உளவு பார்ப்பதற்கு குறித்த ராடர் சீனாவிற்கு பெரிதும் பயன்படும்.

மேலும், இந்தியாவிலுள்ள ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மையத்தின் நடவடிக்கைகள் மற்றும் ஒடிசாவிலுள்ள ஏவுகணை சோதனைத்தளம் ஆகியனவற்றையும் குறித்த ராடர் மூலம் அவதானிக்க முடியும்.

கடந்த ஆண்டுகளில் சீனா 180 இற்கும் மேற்பட்ட விண்வெளி கருவிகளை ஏவியுள்ளதுடன் இந்த வருடத்தில் 200 விண்வெளி கருவிகளை அனுப்பவதற்கும் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version