உலகம்

கோலாகலமாக தயாராகிறது பக்கிங்காம் அரண்மனை மே 6 இல் முடிசூட்டு விழா

Published

on

கடந்த ஆண்டு இங்கிலாந்து மகாராணி 2-ம் எலிசபெத் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இதையடுத்து புதிய மன்னராக 3-ம் சார்லஸ் அரியணை ஏறினார்.

இந்நிலையில் எதிர்வரும் மே மாதம் 6ம் திகதி மன்னர் சார்லசின் முடிசூட்டு விழா நடைபெறும் என்று பக்கிங்காம் அரண்மனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த முடிசூட்டுவிழாவின் போது பாரம்பரிய மரபுப்படி மன்னர் சார்லஸ் கையில் செங்கோல், தடி ஆகியவற்றை ஏந்தி அரியணையில் அமர்வார். பின்னர் மூத்த மதகுருமார்களால் புனிதப்படுத்தி ஆசிர்வதிக்கப்பட்டதும் புனித எட்வர்டின் கிரீடம் மன்னர் சார்லசுக்கு சூட்டப்படும்.

இதையடுத்து பக்கிங்காம் அரண்மனையின் பால்கனியில் இருந்து மன்னர் சார்லஸ் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார். அதே நாளில் இங்கிலாந்து ராணியாக கமீலா பார்க்கர் முறைப்படி அறிவிக்கப்படுவார்.

இந்த முடிசூட்டு விழாவில் பங்கேற்க இளவரசர் வில்லியம் அவரது மனைவி கேட், மற்றொரு இளவசரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி மேகன் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் மன்னரின் முடிசூட்டு விழாவுக்கான அழைப்பிதழ்கள் வெளியிடப்பட்டுள்ளன. உலகம் முழுவதும் உள்ள சுமார் 2000 முக்கிய பிரபலங்களுக்கு அழைப்பிதழ்கள் அனுப்பட உள்ளன.

முடிசூட்டு விழா எதிர்வரும் மே மாதம்6ம் திகதி வெஸ்ட் மின்ஸ்டர் பகுதியில் உள்ள அபேதேவாலயத்தில் கோலாகலமாக நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.

#World

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version