உலகம்

கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க முடிவு!

Published

on

பல OPEC நாடுகள் மே மாதம் முதல் எரிபொருள் உற்பத்தியை குறைக்க முடிவு செய்துள்ளன. சந்தை ஸ்திரத்தன்மையை இலக்காகக் கொண்டு தடுப்பு நடவடிக்கையாக அவசரகால உற்பத்தி குறைப்பு மேற்கொள்ளப்படுவதாக OPEC அமைப்பு தெரிவித்துள்ளது.அதன்படி, தினமும் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய் உற்பத்தி அளவு 44,000 லட்சமாக குறைக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ளது.

குவைத் தினசரி கச்சா எண்ணெய் உற்பத்தி அளவு 28,000 லட்சம் பீப்பாய்களாக குறைத்துள்ளதாகவும், ஓமன் தினசரி கச்சா எண்ணெய் உற்பத்தியை 40,000 பீப்பாய்களாக குறைக்க முடிவு செய்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த சில மாதங்களாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறையும் போக்கு காணப்படுவதாகவும், விலை குறையாமல் இருக்க OPEC கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க முடிவு செய்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

#world

 

Exit mobile version