உலகம்

கச்சா எண்ணெய்யின் விலை குறைந்தது!!

Published

on

அடுத்த சில வாரங்களுக்குள் உலக சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை பாரிய சதவீதத்தால் குறைவடையக்கூடும் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கச்சா எண்ணெய்யின் விலை திடீரென பெருமளவு குறைவடையவதன் ஊடாக, உலகம் முழுவதிலும் உள்ள மக்களுக்கும் பாரியளவில் நிவாரணம் கிடைக்கும் என அந்தச் செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

இதன் காரணமாக எரிபொருளின் விலை சுமார் 20 வீதத்தால் குறைவடையக்கூடும் என அந்தத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

ரஷ்யா-உக்ரைன் போருக்குப் பிறகு கச்சா எண்ணெய் விலை இவ்வளவு குறைந்துள்ளது இதுவே முதல் முறை என்றும் அந்தச் செய்திகள் சுட்டிக்காட்டியுள்ளன.

சமீபகாலமாக கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு ரஷ்யா – உக்ரைன் போர் ஒரு வலுவான காரணியாக இருந்ததாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதற்கிடையில், கடந்த வாரம், ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை சுமார் 67 டொலர்கள் வரை குறைந்துள்ளது.

2021-ம் ஆண்டுக்குள் 100 டொலராக உயர்ந்திருந்த ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை, இந்தளவு குறைந்திருப்பது இதுவே முதல் முறை.

இதேவேளை, எரிபொருள் விலை சூத்திரத்தின் பிரகாரம் இலங்கை மக்களுக்கு ஏப்ரல் மாதம் நிவாரணம் வழங்கப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர சமீபத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் கருத்து வெளியிடும் போதே அமைச்சர் இதனை தெரிவித்திருந்தார்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version