உலகம்

துருக்கி நிலநடுக்கம் – 248 மணி நேரத்துக்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்ட 17 வயது சிறுமி

Published

on

துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த 6-ந்தேதி அதிகாலையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் பேரழிவை ஏற்படுத்தி உள்ளது. ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமாகி உள்ளன.

40 ஆயிரம் பேர் பலியாகி உள்ள நிலையில், மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கியிருப்பதால் உயிரிழப்பு மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.

மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெறும் நிலையில், பலர் உயிருடன் மீட்கப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் நிலநடுக்கம் ஏற்பட்ட 248 மணி நேரத்துக்கு பிறகு, கஹ்ரமன்மராஸ் மாகாணத்தில் அலினா என்ற 17 வயது சிறுமியை துருக்கி மீட்புக்குழுவினர் இன்று உயிருடன் மீட்டனர்.

அவருக்கு தேவையான மருத்துவ உதவி வழங்கப்படுகிறது. மீட்கப்பட்ட சிறுமி ஆரோக்கியத்துடன் இருந்ததாக மீட்பு பணியில் ஈடுபட்ட நிலக்கரி சுரங்க தொழிலாளி அலி அக்டோகன் தெரிவித்தார்.

#world

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version