உலகம்

செவ்வாய் கிரகத்தில் கரடி? – புகைப்படம் வெளியிட்ட நாசா

Published

on

செவ்வாய் கிரகத்தை அமெரிக்க விண்வெளி கழகமான நாசா பல்வேறு செயற்கை கோள்களை அனுப்பி ஆய்வு செய்து வருகின்றன. செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ வாய்ப்பு உள்ளதா? என்று ஆய்வு நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் செவ்வாய் கிரகத்தில் பாறையில் கரடி முகம் அமைப்பு இருப்பது போன்ற படத்தை நாசா வெளியிட்டுள்ளது. நாசா அனுப்பிய ஆர்பிட்டர் மூலம் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டு உள்ளது. செவ்வாய் கிரகத்தில் உள்ள குழிகளின் புகைப்படம் இதுவாகும். இதில் மேலே இரண்டு சிறிய குழிகள் காணப்படுகின்றன. அவை ஒரே நேர்கோட்டில் சரியாக உள்ளன. அவைகள் கண்கள் போல் உள்ளது.

அதன் கீழ் பகுதியில் பெரிய குழி உள்ளது. இது அழகாகவும், நீளமாகவும் உள்ளது. அது வாய் மற்றும் மூக்கு பகுதி போல் உள்ளது. இந்த புகைப்படத்தை நாசா வெளியிட்டுள்ளது. இது இயற்கையாக ஏற்பட்ட குழி ஆகும். அது கரடியின் முகத்தை போல் தோன்றுகிறது.

மொத்தம் 2 ஆயிரம் மீட்டர் அகலத்திற்கு இந்த உருவம் உள்ளது. இது அதிநவீன கேமரா மூலம் படம் எடுக்கப்பட்டது. மூக்கு பகுதியை போன்று இருப்பது ஒரு எரிமலையாக இருக்கலம் அல்லது மண் துவாரமாக இருக்கலாம் என்றும் சுற்றி தெரியும் வட்ட வடிவமானது எரிமலை குழம்பு அல்லது மண் சரிவாக இருக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

ஏற்கனவே செவ்வாய் கிரகத்தை எடுத்த புகைப்படங்களில் பல ஆச்சரிய விஷயங்கள் இருந்தன. பெண் ஒருவர் பாறை மீது அமர்ந்து இருப்பது போன்ற புகைப்படம் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

#world

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version