உலகம்
ஓரின சேர்க்கை திருமணங்கள் – அமெரிக்கா ஒப்புதல்!!
அமெரிக்காவில் ஓரின சேர்க்கையாளர்களை அங்கீகரிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இது போல ஓரின சேர்க்கையாளர்களின் திருமணத்தையும் அங்கீகரிக்க வேண்டும் எனவும் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்தது.
இது தொடர்பாக அமெரிக்க பாராளுமன்றத்தில் விவாதம் நடந்தது. இதற்கு ஒருசாரார் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் இது தொடர்பான சட்டம் கொண்டு வர அமெரிக்காவில் விவாதங்கள் நடந்து வந்தது.
பல கட்ட விவாதங்களுக்கு பிறகு இந்த கோரிக்கையை ஏற்றுக்கொள்ள அமெரிக்க பிரதிநிதிகள் சபை ஒப்புக்கொண்டுள்ளது. இது தொடர்பான வாக்கெடுப்பு நேற்று நடந்தது.
இதில் ஓரின சேர்க்கையாளர்கள் திருமணத்தை அங்கீகரிப்பது மற்றும் இத்திருமணங்களுக்கு தேவையான பாதுகாப்பு வழங்குவதை பிரதிநிதிகள் சபை ஏற்றுக்கொண்டது.
பிரதிநிதிகள் சபை ஏற்றுக்கொண்டதை தொடர்ந்து இந்த மசோதா அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கையெழுத்துக்கு அனுப்பப்படும்.
இந்த மசோதாவில் ஜனாதிபதி ஜோ பைடன் விரைவில் கையெழுத்திடுவார் என கூறப்படுகிறது.
அமெரிக்காவில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கு அங்கீகாரம் வழங்கப்படும் போது அது உலக அளவிலும் திருப்பத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
#world
You must be logged in to post a comment Login