உலகம்

படகு மூலம் இந்தோனேசியா சென்றடைந்த அகதிகள்

Published

on

மியான்மரில் கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்களுக்கு பதிலடியாக 2017 ஆகஸ்ட் மாதம் முதல் ராணுவம் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ராணுவ நடவடிக்கைகளுக்கு பயந்து ரோஹிங்கியா முஸ்லிம்கள் வங்காளதேசத்தில் உள்ள அகதிகள் முகாம்களுக்குத் தப்பிச் சென்றவண்ணம் உள்ளனர்.

பாலியல் பலாத்காரம், கொலைகள் மற்றும் ஆயிரக்கணக்கான ரோஹிங்கியாக்களின் வீடுகளை எரித்ததாக மியான்மர் ராணுவத்தினர் மீது குற்றம்சாட்டுகின்றனர். இதுவரை லட்சக்கணக்கான ரோஹிங்கியா மக்கள் அகதிகளாக வங்காளதேசம் சென்றுள்ள நிலையில், சமீபத்தில் 117 ரோஹிங்கியா அகதிகள் இந்தோனேசியாவின் ஆச்சே மாகாணத்தின் கடற்கரையோரத்தில் கண்டுபிடிக்கப்பட்டனர்.

மியான்மரில் இருந்து படகு மூலம் ஒரு ஒரு மாத காலமாக ஆபத்தான கடல் பயணம் மேற்கொண்ட அவர்கள், மலேசியா நாட்டுக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். ஆனால் ஆச்சே கடற்பகுதியில் சிக்கித் தவித்த அவர்கள், மெவுனசா பாரோ கிராமத்தில் கரையேறி உள்ளனர்.

பசி, பட்டினியால் தவித்த அவர்களை கடலோர கிராமத்தில் உள்ள சமுதாய கூடத்தில் இந்தோனேசிய அதிகாரிகள் தங்க வைத்துள்ளனர். அகதிகளின் விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன. இதேபோல் கடந்த மார்ச் மாதம் 114 ரோஹிங்கியா அகதிகள், ஆச்சே மாகாணம் பைலயின் மாவட்ட கடற்கரையில் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

#world

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version