உலகம்

கடும் வறட்சி! – அடுத்தடுத்து பலியாகும் விலங்குகள்

Published

on

கிழக்கு ஆப்பிரிக்கா நாடுகளில் கடந்த 40 ஆண்டுகள் இல்லாத வறட்சி நிலவி வருகிறது. அதுவும் கென்யாவில் வரலாறு காணாத அளவு வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் காடுகளில் வசித்து வரும் வன விலங்குகள் அடுத்தடுத்து உயிர் இழந்து வருகின்றன.

கடந்த 10 மாதங்களில் மட்டும் இதுவரை 205 யானைகள் இறந்து விட்டன. பிப்ரவரி மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை யானைகள் தவிர வரிக் குதிரைகள், ஒட்டகசிவிங்கிகள், காட்டெருமைகள், உள்ளிட்ட 14 வகையான வன விலங்குகள் வறட்சியின் கோரபிடியில் சிக்கி பலியாகி விட்டன. வன விலங்குகள் தொடர்ந்து இறந்து வருவது சமூக ஆர்வலர்களை கவலைக்குள்ளாக்கி இருக்கிறது.

கென்யாவை பொறுத்தவரை சிறந்த சுற்றுலா தலமாக திகழ்ந்து வருகிறது. வறட்சி காரணமாக சுற்றுலா தொழிலும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. அரசுக்கு வருவாய் இழப்பும் ஏற்பட்டு உள்ளது. இது அந்நாட்டு அரசை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

கென்யாவில் தற்போதைய சூழ்நிலையில் மழைப்பொழிவுக்கான சூழ்நிலையும் இல்லை. இதனால் மேலும் பல வன உயிர் இனங்கள் பாதிக்கப்படும் நிலை உள்ளது. வன விலங்குகள் இறப்பதை தடுக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

#world

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version