உலகம்
இம்ரான் கானின் எம்.பி பதவியும் பறிப்பு
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பாகிஸ்தான் தெஹ்ரீக் இன்சாப் (பிடிஐ) என்ற கட்சியை நடத்தி வருகிறார்.
2018-ல் நடைபெற்ற தேர்தலில் அக்கட்சி பெரும்பான்மை இடங்களைப் பிடித்தது. சிறிய கட்சிகளின் உதவியுடன் ஆட்சியமைத்த இம்ரான் கான் 2018 முதல் 2022 ஏப்ரல் வரை பாகிஸ்தான் பிரதமராக பதவி வகித்தார்.
இந்நிலையில், பாகிஸ்தான் நாட்டில் பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு உள்ளிட்ட காரணங்களால், இம்ரான் கான் தலைமையிலான அரசு, கடந்த ஏப்ரல் மாதம் கவிழ்ந்தது.
இந்நிலையில் பாகிஸ்தான் நாட்டின் புதிய பிரதமராக, முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபின் சகோதரர் ஷெபாஸ் ஷெரீப் பதவி ஏற்றார்.
அதன்பிறகு அண்மையில் நடைபெற்ற இடைத்தேர்தலில், இம்ரான் கானின் பிடிஐ கட்சி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. இந்நிலையில், வெளிநாட்டு தலைவர்களிடம் இருந்து பெறப்பட்ட பரிசுப் பொருட்களை விதிகளை மீறி விற்ற முறைகேட்டில், முன்னாள் பிரதமர் இம்ரான் கானை தகுதி நீக்கம் செய்து அந்நாட்டு தேர்தல் ஆணையம் நேற்று உத்தரவிட்டு உள்ளது. இந்த தகவலை பாகிஸ்தான் ஊடகங்கள் உறுதிப்படுத்தி உள்ளன.
அரசு பரிசுகளை சட்டவிரோதமாக விற்ற குற்றச்சாட்டின் பேரில் இம்ரான் கான் பொது பதவி வகிக்க 5 ஆண்டுகள் தடையும் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அவரது எம்.பி. பதவியும் பறிபோகும் ஆபத்தில் உள்ளது.
#World
You must be logged in to post a comment Login