உலகம்

அமெரிக்காவில் தீபாவளி கொண்டாட்டங்கள் ஆரம்பம்

Published

on

இந்துக்களின் புனித பண்டிகையான தீபாவளி உலகம் பூராகவுள்ள இந்துக்களால் 24 ஆம் திகதி கொண்டாடப்பட உள்ளது.

அந்தவகையில் அமெரிக்காவில் தீபாவளி கொண்டாட்டங்கள் ஏற்கனவே தொடங்கி விட்டது. அமெரிக்காவின் பல மாகாணங்களின் தலைநகர், ஆளுநர் மாளிகைகளில் தீபாவளி விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

இந் நிலையில் அமெரிக்க துணை ஜனாதிபதியும், இந்திய வம்சாவளியுமான கமலா ஹாரீஸ், தனது வீட்டில் நேற்று பண்டிகையை கொண்டாடினார். இதற்காக பிரபலமான இந்திய-அமெரிக்கர்கள், இந்திய தூதரக அதிகாரிகள் என ஏராளமானோருக்கு அவர் அழைப்பு விடுத்திருந்தார்.

மேலும் முன்னாள் ஜனாதிபதி டிரம்பும் புளோரிடாவில் உள்ள தனது இல்லத்தில் நேற்று தீபாவளி கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்.

வெள்ளை மாளிகையில் வருகிற 24 ஆம் திகதி ஜனாதிபதி ஜோபைடன், தனது மனைவி ஜில் பைடனுடன் தீபாவளி கொண்டாட உள்ளார். இதில் பஙகுபற்ற ஏராளமான இந்தியர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

இதைத்தொடர்நது 26 ஆம் திகதி வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பிளிங்கன், தனது அமைச்சகத்தில் தீபாவளி விருந்து ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளார். இதில் ஏராளமான தூதரக அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

முன்னதாக நியூயார்க் நகரில் உள்ள புகழ்பெற்ற டைம்ஸ் சதுக்கத்தில் கடந்த 15 ஆம் திகதி தீபாவளி கொண்டாட்டம் தொடங்கியது. இதில் நகர மேயர் எரிக் ஆடம்ஸ், செனட்டர் சக் சியூமர், இந்திய துணை தூதர் ரந்திர் ஜெய்ஸ்வால் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

#worldNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version