இந்தியா

உலக பொருளாதார வளர்ச்சி சரிவை நோக்கி! – IMF அறிக்கை

Published

on

உலக பொருளாதார கணிப்பு அறிக்கையை சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ளது.

அதில், 2021-ல் 6 சதவீதமாக இருந்த உலக பொருளாதார வளர்ச்சி 2022-ல் 3.2 சதவீதமாகக் குறையும் என்றும், 2023-ல் இது 2.7 சதவீதமாக மேலும் குறையும் என்றும் கணித்துள்ளது.

வளர்ந்த நாடுகளின் பொருளாதாரமும் கடந்த ஆண்டை ஒப்பிடும்போது 2022 மற்றும் 2023ம் ஆண்டுகளில் பெரும்பாலும் குறையும் என்று சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது. வளர்ந்த நாடுகளில் கடந்த 2021-ல் 5.2 சதவீதமாக இருந்த வளர்ச்சி, 2022-ல் 2.4 சதவீதமாகவும், 2023-ல் 1.1 சதவீதமாகவும் சரியும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 2021-ல் 5.7 சதவீதமாக இருந்த அமெரிக்க பொருளாதார வளர்ச்சி, 2022-ல் 1.6 சதவீதமாகவும், 2023-ல் ஒரு சதவீதமாகவும் குறையும் என்று சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது.

இதேபோல், கடந்த 2021-ல் 8.1 சதவீதமாக இருந்த சீன பொருளாதார வளர்ச்சி, 2022-ல் 3.2 சதவீதமாகவும், 2023-ல் 4.4 சதவீதமாகவும் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

உலகின் 5-வது மிகப் பெரிய பொருளாதார நாடாகத் திகழும் இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி கடந்த 2021-ல் 8.7 சதவீதமாக இருந்த நிலையில், அது சற்று குறைந்து 2022-ல் 6.8 சதவீதமாக இருக்கும் என்றும், 2023-ல் அது 6.1 சதவீதமாக இருக்கும் என்றும் சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது.

#world

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version