உலகம்
பஞ்சமும் பட்டினியும் தலைவிரித்தாடும்! – ஐநா எச்சரிக்கை
ஆப்கானிஸ்தானில் பஞ்சமும், பட்டினியும் தலைவிரித்தாடும் சூழ்நிலை உருவாகியுள்ளது. சுமார் 60 லட்சம் பேர் பாதிக்கப்படும் அபாயமும் உருவாகியுள்ளது என ஐ.நா.பாதுகாப்புக் கவுன்சிலில் ஐ.நா.வின் மனிதாபிமான விவகாரங்களுக்கான துணைப் பொதுச் செயலாளர் மார்ட்டின் கிரிப்பித்ஸ் தெரிவித்துள்ளார்.
தெற்கு ஆசிய நாடான ஆப்கானிஸ்தானில், சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஆப்கானிஷ்தானில் தலிபான்கள் ஆட்சி மற்றும் அதிகாரம் இடம்பெற்று வருகிறது.
தலிபான்கள் ஆட்சி அமையப்பெற்ற நிலையில், அங்கு பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தற்போது கல்விக்காக கஜகஸ்தான் மற்றும் கட்டார் நாட்டுக்கு மாணவிகள் செல்லக்கூடாது என்றும் தலிபான்கள் உத்தரவிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
#world
You must be logged in to post a comment Login