உலகம்

900 ஆண்டுகள் பழமையான நீண்ட மரப்பாலம் எரிந்து சாம்பல்!

Published

on

900 ஆண்டுகள் பழமையான சீனாவின் வரலாற்று சிறப்புமிக்க மரப்பாலம் ஒன்று திடீரென்று தீப்பிடித்து எரிய தொடங்கியுள்ளது.

சீனாவின் கிழக்கே புஜியான் மாகாணத்தில் பிங்னன் கவுண்டி பகுதியில் சாங் வம்சம் ஆட்சி செய்த (960-1127) காலகட்டத்தில் மரத்தில் உருவான நீண்ட மரப்பாலம் ஒன்று எழுப்பப்பட்டது. இது 98.3 மீட்டர்கள் நீளம் கொண்டது.

குறித்த பாலமே தீப்பற்றி எரிகிறது. 10 மணிநேர போராட்டத்திற்கு பின்பு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. எனினும், முதல் 20 நிமிடத்தில் தீயில் எரிந்ததில் மரப்பாலம் கீழே விழ தொடங்கியுள்ளது.

இதுபற்றி குளோபல் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில்,

இந்த தீ விபத்து மனிதர்களின் தொடர்பினால் ஏற்பட்டிருக்க வேண்டும். நீரின் மேல் அமைந்த அந்த பாலம் தொடர்ச்சியாக தீப்பிடித்து எரிந்திருக்கிறது என்பது மிக அரிது.

10 மணிநேரத்தில் தீ கட்டுப்படுத்தப்பட்ட போதிலும், முதல் 20 நிமிடத்திலேயே மரப்பாலம் எரிந்து விழுந்துள்ளது என தெரிய வந்துள்ளது. அதனுடன் தனித்துவ மரஅமைப்பு, உள்ளிட்டவற்றை கவனிக்கும்போது, தீயால் சேதமடைந்திருக்கும் என்பதில் சந்தேகம் வலுக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வனான் பாலம் என பெயரிடப்பட்ட இந்த பாலம் பிரபஞ்சத்தின் அமைதிக்கான பாலம் என்றும் அழைக்கப்படுகிறது. பொதுவாக கற்களால் பாலங்கள் அமைக்கப்படும். கலாசார மதிப்பு கொண்ட முக்கியத்துவம் வாய்ந்த, பழமையான, மரக்கட்டமைப்பில் உள்ளார்ந்த அறிவு மற்றும் புத்திச்சாலித்தனத்துடன், தொழில்நுட்ப அறிவுடன் வடிவமைத்து இருப்பதுடன், வளைவுகளுடன் கூடிய இந்த அளவு நீளத்துடன் மரப்பாலம் ஒன்றை அமைப்பது என்பது மிக கடினம் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஆற்றின் மீது அமைந்திருக்கும் கலை நுட்பம் வாய்ந்த மரத்தில் உருவான சீனர்களின் உள்ளார்ந்த அறிவை நிரூபிக்கும் வகையிலான கட்டமைப்பு ஒன்றை நாம் இழந்திருக்கிறோம் என்று பெகிங் பல்கலை கழகத்தின் பழமையான கட்டமைப்பின் நிபுணர் சூ யிட்டாவோ தெரிவித்துள்ளார்.

#world

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version