உலகம்

சர்ச்சையில் சிக்கிய உக்ரைன் அதிபர்!

Published

on

அமெரிக்காவில் இருந்து வெளியாகும் பிரபல மாதாந்த இதழான வோக் இதழுக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும், அவரது மனைவி ஒலனாவும் நேர்காணல் அளித்துள்ளனர்.

உக்ரைனின் மீதான ரஷியாவின் போர் 150 நாட்களை கடந்துள்ளது. இந்தப் போரில் ஆயிரக்கணக்கானோர் கொன்று குவிக்கப்பட்டனர். சுமார் 1 கோடி பேர் நாட்டை விட்டு வெளியேறி அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளனர்.

இதற்கிடையே, அமெரிக்காவின் பிரபல மாத இதழான வோக் இதழுக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும், அவரது மனைவி ஒலனாவும் நேர்காணல் அளித்துள்ளனர். ஒக்டோபர் மாதம் வெளியாகும் வோக் இதழில் இந்த நேர்காணல் இடம்பெறுகிறது.

இந்நிலையில், அதற்கான முன்னோட்ட படங்களை வோக் இதழ் தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ளது. அதுதான் தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

வோக் இதழ் வெளியிட்டுள்ள புகைப்படங்களில் ஒலனா போரினால் பாதிக்கப்பட்ட இடங்களில் நிற்கும் படங்களும், ஜெலன்ஸ்கியும், ஒலனாவும் ஜோடியாக இருக்கும் படங்களும் உள்ளன. இந்த புகைப்படங்களுக்கு வரவேற்பு ஒருபக்கம் இருந்தாலும், போர் நடக்கும் நேரத்தில் இப்படி போட்டோ ஷூட் நடத்தி இணையத்தில் வெளியிடுவது அவசியமா என்ற எதிர் கேள்விகளும் எழுந்துள்ளன.

#World

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version