உலகம்

திரைமறைவில் ரஷ்யாவிடம் எண்ணெய் கொள்வனவு!- மேற்குலக நாடுகள் மீது இந்தியா குற்றச்சாட்டு

Published

on

இந்தியாவுக்கு எண்ணெய் வழங்கும் நாடுகளில் ரஷ்யா இரண்டாவது இடத்தை வகித்து வருவதால் அதற்காக உக்ரைன் யுத்தத்தை நடத்துவதற்கு இந்திய பணம் பயன்படுத்தப்படுவதாக மேற்குலகு விமர்சனம் செய்வது நியாயமற்றது என இந்திய எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்திருப்பதோடு மேற்குலக நாடுகள் திரைமறைவில் இன்றைக்கும் ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் கொள்வனவில் ஈடுபட்டிருப்பதை என்னவென்று புரிந்துகொள்வது எனக் கேள்வி எழுப்பியுள்ளன.

ஈரானிடமிருந்தும் வெனிசுலாவிடமிருந்தும் எண்ணெய் கொள்வனவு செய்யக்கூடாது என தடை விதிக்கப்பட்டபோது அந் நாடுகளிடமிருந்து கொள்வனவை இந்தியா நிறுத்தியிருந்தபோதும் சீனா தொடர்ந்தும் அந் நாடுகளில் இருந்து எண்ணெய் கொள்வனவு செய்து வந்தது. சீனா அவ்வாறிருக்கும் போது இந்தியா ஏன் எண்ணெய் கொள்வனவை வர்த்தகமாக பார்க்கக்கூடாது?

ஒரு வருடத்துக்கு முன்னர் தினமொன்றுக்கு 33 ஆயிரம் பீப்பாய் ரஷ்ய மசகு எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்தது.

கடந்த ஏப்ரல் மாதம் 2 லட்சத்து 77 ஆயிரம் பீப்பாய்களாக இது உயர்ந்ததோடு கடந்த மே மாதம் முதல் தினசரி 8 லட்சத்து 19 ஆயிரம் பீப்பாய்களாக தினசரி இறக்குமதி உயர்ந்துள்ளது.

#WorldNews

Exit mobile version