உலகம்

76 மில்லியன் ஆண்டு பழமையான டைனோசர் எலும்புக்கூடு ஏலம்

Published

on

சுமார் 76 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் பூமியில் சுற்றித்திரிந்ததாக நம்பப்படும் டைனோசரின் எலும்புக்கூடு இம்மாதம் நியூயோர்க்கில் ஏலத்திற்கு விடப்படும் என்று சௌதபிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

எலும்புக்கூட்டுப் படிமம் டைரனோசொரஸ் வகையுடன் தொடர்புடைய கோர்கோசாரசுக்கு சொந்தமானது.

அமெரிக்காவின் மொண்டானா மாநிலத்தில் 2018இல் கண்டறியப்பட்ட எலும்புக்கூடு கிட்டத்தட்ட 3 மீற்றர் உயரமும் 6.7 மீற்றர் நீளமும் கொண்டுள்ளது.

இதுவரை கண்டறியப்பட்ட கோர்கோசாரஸ் எலும்புக்கூடுகள் அனைத்தும்அருங்காட்சியகங்களில் உள்ளதாகவும் இக்குறிப்பிட்ட எலும்புக்கூடு மட்டுமே தனியார் உரிமைக்குக் கிடைக்கக்கூடியது என்றும் ஏல நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

தனது வாழ்க்கையில் பல தனித்துவமான பொருட்களை விற்கும் பாக்கியத்தைப் பெற்றிருந்தாலும் அவற்றுள் சில பொருட்கள் மட்டுமே கோர்கோசொரஸ் எலும்புக்கூட்டைப் போல அதிகளவு ஆச்சரியத்தை ஏற்படுத்தக்கூடியவை என்று சௌதபிஸ் நிறுவனத்தின் பணியாளர் ஒருவர் கூறினார்.

எலும்புக்கூடு 5 மில்லியன் டொலரிலிருந்து 8 மில்லியன் அமெரிக்க டொலர்வரை விலைபோகலாம் என்று சௌதபிஸ் மதிப்பிட்டுள்ளது.

#World

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version