உலகம்

ஊழியருடன் ரகசிய உறவு! – 9வது குழந்தைக்கு தந்தை ஆனார் எலான்!

Published

on

உலகின் முன்னணி பணக்காரரான எலான் மஸ்க் தனது நிறுவனத்தில் பணிபுரியும் ஷிவோன் சிலிஸ் என்ற பெண் அதிகாரியுடன் உறவில் இருந்து இரட்டை குழந்தைகளுக்கு தந்தையாகி உள்ளார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதத்தில், எலான் மஸ்க் மற்றும் சிலிஸ் ஆகிய இருவரும் தங்களின் இரட்டை குழந்தைகளின் பெயர் வைக்கும் போது தான் அதன் ஆவணங்கள் மூலம் இந்த செய்தி உறுதியாகியுள்ளது.

அவருடைய முதல் மனைவியான கனடாவை சேர்ந்த எழுத்தாளர் ஜஸ்டின் வில்சன், எலாஸ் மஸ்க்கின் மூலம் ஐந்து குழந்தைகளை பெற்றுள்ளார். பின்னர் கனடாவை சேர்ந்த பாடகி கிரிமிஸ், அவர் மூலம் இரு குழந்தைகளை பெற்றுள்ளார்.

இந்த நிலையில், இந்த தம்பதியினருக்கு கடந்த நவம்பர் மாதம் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன. இந்த இரட்டையர்களையும் சேர்த்து எலான் மஸ்க்கிற்கு மொத்தம் 9 குழந்தைகள் உள்ளன.

கனடாவின் ஒன்டாரியோவில் பிறந்த 36 வயதான ஜிலிஸ், எலான் மஸ்க்கை முதன்முதலில் 2015இல் சந்தித்தார். எலான் மஸ்க்கின் நிறுவனத்தில் ஷிவோன் சிலிஸ் 2017ஆம் ஆண்டு மே மாதம் வேலைக்கு சேர்ந்துள்ளார்.

டெஸ்லாவின் செயற்கை நுண்ணறிவு பிரிவின் திட்ட இயக்குனராக பணியாற்றிய ஷிவோன் சிலிஸ், 2019ஆண் ஆண்டில் நியூராலிங்கில் சேர்ந்துள்ளார்.

மேலும், டுவிட்டர் நிறுவனத்துடன் எலான் மஸ்க்கின் ஒப்பந்தம் நிறைவடைந்த பின், டுவிட்டர் நிறுவனத்தை ஷிவோன் முன்னின்று நடத்துவார் எனக் கூறப்படுகிறது.

மக்கள்தொகை கட்டுப்பாடு என்ற கருத்து அதிக தாக்கத்தை செலுத்தியுள்ளதால் உலகில் வயதானோர் எண்ணிக்கை அதிகரித்து இளம் வயதினர் எண்ணிக்கை குறைந்து வருவதை குறிப்பிட்டு தொடர்ந்து கருத்து தெரிவித்து வரும் எலான் மஸ்க், மீண்டும் மனித குலம் அதிக குழந்தைகளை பெற்றுக்கொண்டு, பெரிய குடும்பங்களாக வாழத் தொடங்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் 51 வயதான எலான் மஸ்க் மீது பாலியல் அத்துமீறல் செய்ததாக ஒரு விமானப் பணிப்பெண் குற்றம் சாட்டியுள்ளார். பாதிக்கப்பட்ட அந்த பெண் ஊழியர் கூறியிருக்கும் குற்ற்ச்சாட்டில், எலான் மஸ்க் அந்த பெண்ணின் அனுமதியின்றி அவரது காலை தேய்த்ததாகவும், ஒரு சிற்றின்ப மசாஜ் செய்வதற்கு ஈடாக குதிரையை வாங்கித் தருவதாகவும் குற்றம் சாட்டினார்.

அவருக்கு அந்த பெண் மசாஜ் செய்யும் போது, மஸ்க் தனது அந்தரங்கத்தை வெளிப்படுத்தியதாகவும், அந்த பெண்ணுக்கு அவருடைய ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் இரண்டரை லட்சம் அமெரிக்க டாலர்கள் தொகை கொடுத்தது என்றும் சமீபத்திய அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், எலான் மஸ்க் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.

#world

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version