உலகம்
வரட்சியால் இத்தாலியில் அவசரநிலைப் பிரகடனம்!
இத்தாலியில் 70 ஆண்டுகளில் இல்லாத மோசமான வரட்சியால் பாதிக்கப்பட்டிருக்கும் போ நதியைச் சூழவுள்ள ஐந்து வடக்கு பிராந்தியங்களில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
நீர் பற்றாக்குறையை கையாள்வதற்காக இந்தப் பிராந்தியங்களுக்கு 38 மில்லியன் டொலர் அவசர நிதி வழங்கப்படுவதாகவும் இத்தாலி அரசு குறிப்பிட்டுள்ளது. இந்த வரட்சி இத்தாலியின் 30 வீதத்துக்கும் அதிகமான விவசாய உற்பத்திகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருப்பதாக அந்நாட்டு விவசாய சங்கம் குறிப்பிட்டுள்ளது.
பங்கீட்டு முறையில் நீரை விநியோகிப்பது குறித்து பல மாநகர சபைகளும் ஏற்கனவே அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன.
குளிர் மற்றும் வசந்த காலத்தில் வழக்கத்திற்கு மாறான சூடான வெப்பநிலை மற்றும் குறைந்த மழைவீழ்ச்சி வடக்கு இத்தாலியில் நீர் பற்றாக்குறையை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய சூழலை அசாதாரண முறையிலும் அதிகாரங்களைக் கொண்டும் நிர்வகிப்பதற்காகவுமே அவசர நிலை அறிவிக்கப்பட்டதாக இத்தாலி அரசு குறிப்பிட்டுள்ளது.
#WorldNews
You must be logged in to post a comment Login
மறுமொழியை நிராகரி
ஒரு பின்னூட்டத்தை இட நீங்கள் கட்டாயம் உள்நுழைந்திருக்க வேண்டும்.
Pingback: நாட்டில் அடுத்த ஆண்டு கடும் வரட்சி - tamilnaadi.com