உலகம்

முதலையை திருமணம் செய்துகொண்ட அமெரிக்க மேயர்! – அதிரவைக்கும் காரணம்

Published

on

வட அமெரிக்க நாடான மெக்ஸிகனில் உள்ள நகரம் ஒன்றின் மேயர் விக்டர் ஹ்யூகோ சோசா, இயற்கையின் வளம் வேண்டி முதலை ஒன்றை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

மெக்சிகனில் உள்ள சான் பெட்ரோ ஹியூமலுலோ என்ற சிறிய நகரத்தின் மேயராக இருப்பவர் விக்டர் ஹ்யூகோ சோசா. இவர் கடந்த வியாழக்கிழமை அன்று, 7 வயதான முதலை ஒன்றை திருமணம் செய்துள்ளார். மேலும் சடங்கின் படி, வாய் மூடியிருந்த அந்தக் குட்டி பெண் முதலையின் மூக்கின் மேல் முத்தம் கொடுத்துள்ளார்.

இயற்கையிடம் மழை வேண்டியும், வளங்கள் சேர வேண்டும் என்றும், மேலும் நீர்நிலைகளில் மீன்கள் பெருக வேண்டும் என்றும் நடத்தப்படும் இந்த சடங்கு திருமணம் ’ஹிஸ்பானிக்’ என்றழைக்கப்படும். இது பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய வரலாற்றை கொண்டது என்று அம்மக்களால் கூறப்படுகிறது. ஓக்ஸாகா மாநிலத்தின் சோண்டல் மற்றும் ஹுவேவ் பழங்குடி சமூகங்களில், இயற்கையின் அருளை கோரும் பிரார்த்தனை சடங்கு இது.

பசிபிக் கடற்கரையில் உள்ள ஓக்ஸாக்கா என்னும் கடற்கரை நகரத்தின் மேயரான ஹியூமலுலோ கூறுகையில், ‘எங்கள் நகரம் மொழிகளையும் பாரம்பர்யங்களையும் விட்டுவிடாமல் பிடிவாதமாகப் பராமரிக்கும் பல பாரம்பர்ய குழுக்களின் தாயகமாக உள்ளது. இயற்கைக்காக நடக்கும் இந்த சடங்கு பரம்பர்யத்தில் ஒன்று’ என்று கூறியுள்ளார்.

இந்தப் பழமையான சடங்கு, தற்போது கத்தோலிக்க ஆன்மிகத்துடன் கலந்திருக்கிறது. இதில், அலிகேட்டர்களுக்கு வெள்ளை திருமண ஆடை மற்றும் பிற வண்ணமயமான ஆடைகளை அணிவிப்பது வழக்கமாகியுள்ளது. குட்டி இளவரசி என்று குறிப்பிடப்படும் ஏழு வயது முதலை, தாய் என்றும் தெய்வம் என்றும் நம்பப்படுகிறது. மேள, தாளங்கள் முழங்க, அந்நகர பெண்கள் முதலையை கையில் ஏந்த, ஆண்கள் தங்களுடைய தொப்பிகளால் முதலைக்கு விசிறி விட, நகரம் முழுவதும் ஊர்வலமாக எடுத்து வரப்பட்ட முதலையை மேயர் திருமணம் செய்து கொண்டார்.

#WorldNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version