உலகம்

கூடுதல் ஆயுதங்கள் தேவை! – உக்ரைன் ஜனாதிபதி அவசர கோரிக்கை

Published

on

ரஷ்யாவை எதிர்கொள்ள கூடுதல் ஆயுதங்கள் வேண்டும் என்று உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி அவசர கோரிக்கை விடுத்துள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்து வரும் போர் இன்று 32ஆவது நாளை எட்டியுள்ளது. இரு நாட்டுப் படைகளும் கடுமையாக மோதி வருகின்றன. இந்நிலையில், போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்யா பேச்சுக்கு உடன்பட வேண்டும் என்று உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி வலியுறுத்தியுள்ளார்.

மேலும், எந்தவொரு பிராந்தியத்தையும் விட்டு கொடுக்க ஒப்புக்கொள்ள முடியாது என்றும் ஜெலன்ஸ்கி உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, போர் விமானங்கள், டாங்கிகள் போன்ற கூடுதல் உபகரணங்கள் இன்றி மரியுபோல் நகரைக் காப்பாற்ற முடியாது என்று தெரிவித்துள்ள ஜெலன்ஸ்கி, நேட்டோ நாடுகள் வசம் உள்ள ஆயுதங்களில் வெறும் ஒரு சதவீத ஆயுதங்கள் மட்டுமே தேவைப்படும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

#World News

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version