உலகம்

கேள்வி கேட்ட பத்திரிகையாளரை டாஸ் வார்த்தையால் திட்டிய அமெரிக்க அதிபர்!!

Published

on

ஊடக சந்திப்பில் கேள்வி எழுப்பிய பத்திரிகையாளரை அமெரிக்க அதிபர் கெட்ட வார்த்தையால் திட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் 46 ஆவது அதிபராக ஜோ பைடன் தேர்ந்தெடுத்த போது அவருக்கு இருந்த ஆதரவு தற்போது தொடர்ந்து குறைந்து வருகின்றது.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அதிபர் ஜோ பைடன் செல்வாக்கு 54 வீதமாக காணப்பட்டது. எனினும் தற்சமயம் அவரது செயல்பாடுகளில் அதிருப்தி கண்ட மக்களால் 41% ஆக அவரது செல்வாக்கு குறைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

மசோதாக்களை நிறைவேற்றுவது, அதிகரித்துவரும் விலைவாசியைக் கட்டுப்படுத்துவது உள்ளிட்ட செயற்பாடுகளில் ஜோ பைடனின் ஆட்சி தடுமாறுவது தான் இதற்கான காரணமாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் அதிபர் ஜோ பைடன் பத்திரிகையாளர்களை சந்திக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் அமெரிக்காவில் அதிகரித்து வரும் பணவீக்கம் குறித்து பத்திரிகையாளர் ஒருவர் கேள்வி எழுப்பி இருந்தார்.

அப்போது ஒலிவாங்கி ஓனில் இருந்தபோதே ஜோ பைடன் அவரை கெட்ட வார்த்தையில் திட்டினார் . இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த பைடன் தரப்பு, பணவீக்கம் குறித்து தவறான தரவுகளை வைத்துப் கேள்வி எழுப்பினார். அந்த தகவலை விமர்சிக்கும் வகையில் தான் அவ்வாறு பேசினார்.

எனினும் பத்திரிகையாளர் சந்திப்பு நிறைவு செய்த அதிபர் பத்திரிகையாளரை அவர் தனிப்பட்ட முறையில் திட்டவில்லை . பத்திரிகையாளரை தொடர்பு கொண்டு பேசி விட்டார் என தெரிவித்துள்ளது வெள்ளை மாளிகை.



#WorldNews


You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version