உலகம்

விமான நிலையத்தை பறிக்க மாட்டோம் – சீனா

Published

on

உகண்டாவின் விமான நிலையத்தை பறிக்க மாட்டோம் என சீனா அறிவித்துள்ளது.

உகண்டாவின் விமானநிலையத்தை சீனா பறித்துக்கொள்வதாக வெளியான செய்திகள் முற்றிலும் பொய்யானவை என சீனத்தூதரகம் தெரிவித்துள்ளது.

சீனாவிடம் உகண்டா அரசாங்கம் பெற்ற கடனை மீளச் செலுத்த முடியாத காரணமாக அந்நாட்டிற்குச் சொந்தமான ஒரேயொரு சர்வதேச விமான நிலையத்தை சீனா கையகப்படுத்தியிருப்பதாக அண்மையில் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

இந்நிலையில் உகண்டா சிவில் விமான சேவை அதிகாரசபையின் ஊடகப்பேச்சாளர் வியன்னே எம்.லுக்யா அவரது உத்தியோகபூர்வ டுவிட்டரில் கீழ் உள்ளவாறு பதிவிட்டுள்ளார்.

‘சீனாவிடம் பெற்ற கடனுக்குப் பதிலாக எமது ‘என்ரெபே’ சர்வதேச விமானநிலையத்தை வழங்கவிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகின்றேன்.

மேலும் நாட்டின் தேசிய சொத்தை உகண்டா அரசாங்கம் வேறு தரப்பினருக்கு வழங்காது எனவும் இத்தகைய சம்பவம் இடம்பெறாது என்பதை நாம் ஏற்கனவே கூறியிருப்பதுடன் தற்போது மீண்டும் உறுதிப்படுத்துகின்றோம்.

ஆகவே விமான நிலையத்தை சீனாவிடம் வழங்குவதாக வெளியான செய்திகள் முற்றிலும் பொய்யானவை’ என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

அத்தோடு சீனா தூதரகமும் விமான நிலையம் பற்றிய செய்திகளில் எந்த ஒரு உண்மையுமில்லை என தெரிவித்துள்ளது.

#world

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version