செய்திகள்

நடக்குமா இணைய போர்?

Published

on

ஜோபைடனுடன் சீன அதிபர் ஜின்பிங் சந்திக்கவுள்ளார்.

அமெரிக்க அதிபர் ஜோபைடனுடன் சீன அதிபர் ஜின்பிங் 15 திகதி சந்திக்க உள்ளதாக அமெரிக்க செய்திகள் தெரிவித்துள்ளன.

இச் சந்திப்பு இணையவழி ஊடாக இடம்பெறவுள்ளதாக அமெரிக்க வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது .

இதன்போது இருதரப்பு உறவுகள், சர்வதேச விவகாரங்கள் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் குறித்து ஆலோசிக்கப்படுமென என அந்த வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

பொருளாதார வல்லரசு நாடுகளான அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் கடந்த சில காலமாக வர்த்தகப் போர், கொரோனா பரவல் விவகாரம் எனப் பல்வேறு பிரச்சினைகளால் பனிப்போர் நடந்த நிலையில் இச் சந்திப்பானது முக்கியமானதாக அமையும் என சர்வதேச ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர் .

இது தொடர்பில் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் விவகாரக் குழு உறுப்பினருக்கும் இடையிலான சந்திப்பொன்று அண்மையில் சுவிட்சர்லாந்தில் இடம்பெற்றதன் பிரகாரமாகவே நாளை மறுதினம் ஜோபைடன் சீன ஜனாதிபதியை இணைய வழியாக சந்திக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

#World

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version