செய்திகள்

அமெரிக்காவில் இடம்பெற்ற இசை நிகழ்வில் 8 போ் சாவு!

Published

on

அமெரிக்காவில் இடம்பெற்ற இசை நிகழ்வில் கலந்து கொண்ட 8 போ் சாவடைந்துள்ளனர்.

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணதின் ஹூஸ்டன் நகரில் இசை நிகழ்வின் போது ஏற்பட்ட சன நெரிசலில் சிக்கி 8 போ்சாவடைந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன .

அமெரிக்க ராப் பாடகா் ட்ரேவிஸ் ஸ்காட்டின் இசை நிகழ்ச்சிக்கு வந்திருந்த சுமாா் 50,000 ரசிகா்கள், ஒரே  நேரத்தில் மேடையை  நோக்கி  சென்றதால்  இந்த நெரிசல் ஏற்பட்டதாக சிஎன்என் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

இந்தச் சம்பவத்தை தொடர்ந்து இசை நிகழ்ச்சி இரத்து செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது .

#world

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version