செய்திகள்
ஆப்கானிஸ்தான் குறித்து அமெரிக்கா வெளியிட்ட பரபரப்புத் தகவல்!!
ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகளின் புகலிடமாக இருக்கக்கூடாது என, அமெரிக்காவும், இந்தியாவும் கூட்டாக வலியுறுத்தியுள்ளன.
ஆப்கானிஸ்தானில் நிலைகொண்டிருந்த அமெரிக்கப் படையினர் அங்கிருந்து வெளியேறிய நிலையில், ஆப்கானிஸ்தானின் அரச படையினருடன் போரிட்ட தலிபான்கள் அந்நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றினர்.
இந்நிலையில் அங்கிருந்து தலிபான் எதிர்ப்பாளர்கள் அனைவரும் வெளியேறும் நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர்.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் தொடர்ந்து ஆட்சியமைக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர்.
இதனையடுத்து, தலிபான்களுக்கு உலக நாடுகள் ஆதரவளிக்க வேண்டுமென, சீனாவும், பாகிஸ்தானும் நேற்று முன்தினம் கூட்டாக அழைப்பு விடுத்திருந்தன.
இந்நிலையில், ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகளின் புகலிடமாக எப்போதும் இருக்காது என, தலிபான்கள் உறுதியளிக்க வேண்டுமென கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன.
அமெரிக்க – இந்தியா நாடுகளின் பாதுகாப்பு அதிகாரிகளின் பங்கேற்பில் விசேட கூட்டம் அமெரிக்கா வாசிங்டனில் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், குறித்த கூட்டத்திலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் ஆட்சியமைத்துள்ள தலிபான்களின் ஆட்சியை, அமெரிக்கா போன்ற நாடுகள் இதுவரை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
#WORLD
You must be logged in to post a comment Login