உலகம்
பாலி தீவில் நிலநடுக்கம் – 3 பேர் சாவு
பாலி தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மூவர் சாவடைந்துள்ளனர்.
இந்தோனேசியாவில் உள்ள பாலி தீவில் இன்று அதிகாலை நில நடுக்கம் ஒன்று ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 4.8 ஆக பதிவாகியுள்ளது.
இந்தோனேசியாவின் துறைமுக நகரமான பாலியின் வடகிழக்கில் உள்ள சிங்கராஜா பகுதியில் இந் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.
அது 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
நிலநடுக்கத்தால் அங்குள்ள கட்டிடங்கள் பயங்கரமாக அதிர்ந்தன.
அதிகாலை என்பதால் வீடுகளில் தூங்கி கொண்டிருந்த மக்கள் நிலநடுக்கத்தை உணர்ந்ததும் வீடுகளை விட்டு அலறியடித்தபடி வெளியே ஓடி வந்தனர்.
இவ் நிலநடுக்கத்தால் ஹில்லி மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 2 பேர் சாவடைந்தாகவும், ட்ருன்யான் மற்றும் கிந்தாமணி கிராமங்களில் வீடுகள், அரசு கட்டிடங்கள் இடிந்த்துள்ளன.
கரங்காசெம் பகுதியில்கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் 3 வயது சிறுமி சாவடைந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன .
You must be logged in to post a comment Login